ஆற்றல்-திறனுள்ள வாழ்க்கை சாத்தியமானது. மின்சார கட்டணத்தை மவெ 171லிருந்து மவெ 35 க்கு குறைத்த தீபன் தம்பதியினர். முயற்சி வேண்டும் என்கின்றனர்.

பத்திரிகை செய்தி 2.2.24

மாதா மாதம் வருகின்ற மின்சார கட்டணம் சிலருக்கு பெரிய தலைவலியாக இருக்கும். மின்சார கட்டணம் கூடிக்கொண்டே போகிறதே அது குறைய வாய்ப்பு இல்லையா என சிலர் முனுமுனுப்பர்.
ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள்.

ஆனால், முயற்சியும் தன்னம்பிக்கயும் இருந்தால் முடியும் என்கின்றனர் தீபன் தம்பதியினர்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் கல்வி அதிகாரியாகவும், நகர்ப்புற தோட்டப் பயிற்சியாளருமான தீபன், தனது மனைவியோடு திட்டமிட்டு தனது மின் கட்டணத்தை மவெ171 லிருந்து 5 மாதங்களில் மவெ 35 ஆகக் குறைத்து சாதனை படைத்துள்ளார்.

அதிக கட்டண மற்றும் வாடகைச் செலவுகளின் சிரமத்தை உணர்ந்த தீபன், ஆகஸ்ட் 2023 ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மின் ஆற்றல் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார்.

அவர் தனது மாதாந்திர மின்சாரச் செலவுக்காக மவெ 100 இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரு வெறி அவருக்கு. ஆனால் அவர் நினைத்ததை விட சாதித்தது உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்றாகும்.

அவரது மனைவியுடன் வசிக்கும் தீபன் குடும்பத்தில் 2 பேர் உள்ளனர். இந்த வெற்றியை அடைவதில் மின் ஆற்றல் சேமிப்பு பயிற்சி செய்ய அவரது மனைவியை சமாதானப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக அவர் நம்பினார்.

5 மாத முயற்சிக்குப் பிறகு, தீபன் தனது கட்டண ரசீதை பார்த்த போது அவரால் நம்ப முடியவில்லை. கட்டணத்தின் மாற்றம் அந்த தம்பதிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
தீபன் தனது மின்சார ஆற்றல் சேமிப்பு குறிப்புகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
இவர் கடந்த 5 மாதங்களாக குளிர்சாதனத்தை பயன்படுத்துவதை நிறுத்தினார். இதனால் மின் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது.

சூடாக இருக்கும்போது அவர் மின்விசிறியை இயக்கி, இயற்கையான காற்றோட்டத்திற்காக ஜன்னல் மற்றும் கதவைத் திறந்தார்.

இந்த மாற்றங்களுக்கு மேலதிகமாக, தீபன் மின்சாரத்தை மிச்சப்படுத்த தனது ஆடைகளை கைகழுவுவதற்கான கூடுதல் நடவடிக்கைகளையும் எடுத்தார். சலவை மற்றும் இஸ்திரி போடுவது வாரத்திற்கு ஒரு முறை என வகுத்துக்கொண்டார்.

தேவப்படும் போது மட்டும் ஷவர் ஹீட்டர். சுவிட்சை செயல்படுத்துவதற்கு முன் ச இருமுறை யோசியுங்கள் என்கின்றார் தீபன்.

தீபனின் விலைமதிப்பற்ற அறிவுரை எதிரொலிக்கிறது: மின்சாரத்தை நியாயமாகப் பயன்படுத்துங்கள், உண்மையான தேவையின் தருணங்களுக்கு மின்சாரத்தை ஒதுக்குங்கள்.

கவனத்துடன் தேர்வு செய்வதில் நாம் அனைவரும் அவருடைய வழியைப் பின்பற்றுவோம்! ஆனால் இந்தப் பயணம் இத்துடன் முடிவடையவில்லை. கவனத்துடன் இருப்பது மற்றும் சரியான தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முறை நமது கிரகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தீபனின் இலக்கு இப்போது தண்ணீர் பயனீடு மற்றும் தண்ணீர் கட்டணத்தை குறைப்பதில் உள்ளது.

அவர் குளிக்கும் நேரத்தைக் குறைக்கவும், பாத்திரங்களைக் கழுவும் தண்ணீரைக் குறைக்கவும், குறைந்த பாத்திரங்களைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

அவர் ஒவ்வொரு துளியையும் கணக்கிடுவதில் உறுதியாக இருக்கிறார், மேலும் அதைச் செய்ய மற்றவர்களுக்கும் தொடர்ந்து கற்பிக்கின்றார். நிலைத்தன்மை மற்றும் சேமிப்பிற்கான தீபனின் நம்பமுடியாத அர்ப்பணிப்புக்காக அவரைப் பாராட்டுவோம்!

பசுமையான மற்றும் அதிக செலவு குறைந்த வாழ்க்கை முறையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவருடன் நாமும் சேருவோம்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்