பத்திரிகைச் செய்தி : 20-11-2024
வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளை மலேசிய அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என பகாங் சுல்தான் அவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரியபடுத்தியுள்ளது.
பகாங் சுல்தானின் இந்த ஆரோக்கியமான ஆலோசனையை சுகாதார அமைச்சு இனியும் தாமதிக்காமல் நடைமுறைக்கு கொண்டு வருமானால், பல ஆயிரக்கணக்கான இளம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
மின்-சிகரெட்டுகள் மற்றும் வேப் பல காரணங்களுக்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. வேப்பில் நிகோடின் என்ற போதைப்பொருள் உள்ளது, மேலும் அவை சிகரெட் புகைப்பதற்கான நுழைவாயிலாக செயல்படும் என்பதற்கான ஆதாரங்கள் வளர்ந்து வருகின்றன.
இளம் வயதிலேயே வேப்பிற்கு அடிமையாவது புகையிலை சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்றார் சுப்பாராவ். இந்த ஆண்டு மட்டும் பள்ளிகூடத்தில் வேப் புகுத்ததற்காக 12,000 மாணவர்கள் பிடிபட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படது.
அதே நேரத்தில் 12,252 பள்ளி சிறார்களும் பள்ளிகூடத்தில் வேப் புகைத்த காரணத்தால் பிடிபட்டுள்ளனர். மேலும் பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவன் அளவுக்கு அதிகமான அளவிற்கு வேப் புகைத்ததால், பள்ளி கரையிலிருந்து விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஆகவே இவையனைத்தையும் கருத்தில் கொண்டு போதை தரும் வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் இந்த வேப் மேற்கெத்திய கலாச்சாரம் அதிகரித்துவருகின்ற காரணத்தினால், பகாங் சுல்தான் இதன் விற்பனைக்கு தடை வேண்டும் என ஆலோசனை தெரிவித்திருந்தார்.
ஆனால் சுகாதார அமைச்சர், அந்தந்த மாநிலங்கள் தடை சட்டத்தை சுயமாக கொண்டுவரலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இது ஏற்புடையது அல்ல. காரணம் நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும்