ஊலு மூடா பெரிய காடுகளில் நடைபெறும் மரவெட்டு வேலைகளால் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் அதிர்ச்சி

ஊலு மூடா காடுகளில் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மரவெட்டு வேலைகள் அதிர்ச்சியைத் தருவதாக அரசாங்க சார்பற்ற அமைப்புகள் (கீழே பட்டியலிடப்பட்டவை) குறிப்பிட்டுள்ளன.

மே மாதத்திலிருந்து நவம்பர் 2020 வரை 87 ஏக்கர் (0.35 சதுர கிலோமீட்டர்) புக்கிட் கெராமாட், தாசிக் அனிங்கிற்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட இயற்கைக் காடுகளில் உள்ள மரங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கு தோட்டம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக துணைக்கோள் காட்சிகள் காட்டுகின்றன. (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மரவெட்டு வேலைகளையும் இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.

ஊலு மூடா பெரிய காடு, நீர் பிடிப்பு இடமாக பாதுகாக்கப்படும் என்றும், அங்கு மரவெட்டு வேலைகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் என்று கெடா மாநில மந்திரி புசார் சமீபத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆகையால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கெடா மாநில அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களின் 4.2 மில்லியன் மக்களின் வீடு, விவசாயம் மற்றும் தொழிற்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஊலு மூடா பெரிய காடு நீர்பிடிப்பு இடமாக பாதுகாக்கப்படும் என்றும் அங்கு மரங்களை வெட்டுவதற்கும், காடுகளை வெட்டுவதற்கும் அனுமதி கொடுக்கப்படமாட்டாது என்றும் கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி முகமட் நோர் கெடா மாநில சட்டசபையில் இந்த வருட ஆகஸ்டில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த துணைக்கோள் படங்கள் தெரிவிக்கும் உண்மைகள் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. இதுபோன்ற காடுகள் அழிப்பு நடவடிக்கைகளினால், காடுகளைப் பாதுகாப்பதற்காக மாநிலத்திற்கு வழங்கப்படும், 2021 வரவு செலவு பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட, மத்திய நிதித் தொகையான, பல்லுயிர் பாதுகாப்புக்கான சுற்றுச்சூழல் நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகும். காடுகளைப் பாதுகாப்பதற்கு இந்த நிதி மூலம் மவெ. 70 மில்லியன் மாநிலத்திற்குக் கிடைக்கும்.

காடுகளைப் பாதுகாப்பதற்காக 2019-ல் மவெ. 60 மில்லியன் தொகை மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் தொகையில் எவ்வளவு கெடா மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

காடுகள் அழிப்பால் உருவாகும் உமிழ்வுகளைக் குறைத்தல், காடுகள் சீரழிதல் நிதி அமைப்பு மூலம் மேலதிக நிதிகளை அளித்தல் போன்ற கூடுதல் நடவடிக்கைளை மாநில அரசாங்கத்தை ஆதரிக்கும் பொருட்டு மத்திய அரசாங்கம் செய்து வருவதை நாங்கள் அறிவோம்.

காடுகள் அழிப்பைக் கண்காணித்தல், தொடர்ந்து அழிப்பதை நிறுத்துதல், காட்டு நிலங்களில் மறுபயிரிடும் திட்டங்களுக்காக அனுமதி வழங்குதல் மற்றும் இன்னும் பல சுற்றுச்சூழலை சேதத்திற்குள்ளாக்கும் பயன்பாடுகளுக்கு ஊலு மூடா பெரிய காடுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை கெடா மாநில அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

மத்திய அரசாங்கம் கெடா மாநில அரசாங்கத்திற்கு வழங்கும் நிதிகள் ஊலு மூடா பெரிய வனத்தின் சூழல்மண்டலம், தண்ணீர் பாதுகாப்பு, பல்லயிர் பாதுகாப்பு மற்றும் தட்ப வெப்ப நிலை சீராக்கம் போன்றவற்றைச் சரிப்படுத்தும் நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

பருவநிலை மாறுதலுக்கான பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையின் கீழ் மலேசியா தன்னுடைய அனைத்துலக பொறுப்பினை நிறைவேற்றும் கடமையை, கெடா மாநில அரசாங்கம் அதன் காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் நிறைவேற்ற வேண்டும். ஊலு மூடா பெரிய காட்டில் மரங்கள் வெட்டப்படுவதை அனுமதித்து, இது போன்ற உன்னத முயற்சிகளுக்கு கெடா மாநில அரசாங்கமே பங்கம் விளைவித்துவிடக்கூடாது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பூவுலகின் நண்பர்களையும் சேர்த்து மொத்தம் கீழ்குறிப்பிட்ட 22 அமைப்புகள் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றன.

மேல் விபரங்களுக்கு பூவுலகின் நண்பர்கள் தலைவர் மீனாட்சி இராமனை 012 4300042 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

This statement is endorsed by the following groups:

1. Consumers’ Association of Penang (CAP)

2. Ecotourism & Conservation Society of Malaysia (ECOMY)

3. Forum Kedah Sejahtera dan Harmoni

4. Gerakan Merbok Bangkit Kedah

5. GreenSmiths

6. Jaringan Penggerak Melayu Desa Negeri Kedah

7. Jaringan Pengguna Lestari Kedah

8. Jaringan Taawun ‘alal Birri Wattaqwa Sungai Petani (Network for Cooperation on Goodness and Piety Sungai Petani)

9. Majlis Muafakat Muslimah Masjid Kedah

10. Malaysian Cave and Karst Conservancy (MCKC)

11. Malaysian Nature Society Penang Branch

12. Persatuan Alam Sekitar Kedah

13. Pertubuhan Dhuafa Sejahtera Kedah

14. Persatuan Peduli Dhuafa dan Pengupayaan Masyarakat

15. Pertubuhan Menangani Gejala Sosial Malaysia (UNGGAS MALAYSIA)

16. Pertubuhan Pelindung Khazanah Alam Malaysia (PEKA) Kedah

17. Rangkaian Petani Lestari Alam

18. Sahabat Alam Malaysia (SAM)

19. Treat Every Environment Special (TrEES)

20. Water Watch Penang (WWP)

21. Yayasan Aman Kedah

22. Yayasan Pendidikan Orang Asli Malaysia

 

பத்திரிகைச் செய்தி 25.11.2020