எரிசக்தி சேமிப்பு: எல்லாப் பயனீட்டாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சிற்றேடு

பெரும்பாலான எரிசக்தி உற்பத்திக்கான வளங்களை எரிக்கும்பொழுது அவை தூய்மைக்கேட்டினைக் கொண்டுவருவதோடு பசுமைக் குடில் வாயுவையும் வெளியாக்குகின்றன. இது பருவநிலை மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள எரிசக்தி உபயோகத்தைக் குறைப்பது அவசியமாகும். அதிகமான பயனீட்டாளர்கள் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்ளும்பொழுது, அது மிக முக்கிய மாற்றங்களுக்கு இட்டுச் செல்கின்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். இதனைக் கருத்தில் கொண்டு, எரிசக்தி சேமிப்பு வழிகாட்டியினைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. எரிசக்தி சேமிப்பு மற்றும் திறன் பற்றிய பயனான குறிப்புகளை இந்தச் சிற்றேட்டிலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் சிறிய நடவடிக்கைகள் கூட சுற்றுச்சூழலுக்குப் பெருத்த மேன்மைகளை உருவாக்குவதற்கான உங்கள் ஆக்கச் சக்தியை உணர்ந்துகொள்ளுங்கள்.

பருவ நிலை மாற்றத்தைத் தணிப்பதற்கு சூழல் சிநேகமான மற்றும் குறைந்த செலவில் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து வைத்திருங்கள்.

இந்த இலவச வழிகாட்டியினை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும்:
ENERGY SAVING 2024 – TAMIL VERSION