கருவுற்றிருந்த 2 பசுக்களையும் பாதுகாப்பாக விடுதலை செய்யுங்கள்.

பத்திரிகை செய்தி 5.8.22

கருவுற்றிருந்த 2 பசுக்களையும் பாதுகாப்பாக விடுதலை செய்யுங்கள்.
பால் கொடுக்கும் பசுக்களை தடுத்து வைப்பது கொடுமையானது.
அவை புல்லைத் தான் சாப்பிட்டது அப்புறம் ஏன் தடுத்து வைக்க வேண்டும்.

பொது இடத்தில் புற்களை சாப்பிட்டதற்காக மயக்க ஊசி தர தர வென இழுத்துச் செல்லப்பட்ட போட்ட இரணடு கர்ப்பம் தரித்த பசு மாடுகளை செபராங் பிறை மாநகர மன்றம் (எம்பிஎஸ்பி) உடனடியாக விடுவிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவை விடுவிக்கப் பட்டால் பாதுகாப்பாக வாழ முடியும் என்றார் அச்சங்கத்தின் கல்வி அதிகாரி என் வி சுப்பாராவ். இரண்டு நாட்களுக்கு முன்பு மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகளால் இரண்டு மாடுகளும் கைப்பற்றப்பட்டன.

ஒரு மாடு 4 மாத கர்ப்பிணியாகவும், மற்றொரு மாடு 8 மாத கர்ப்பிணியாகவும் இருந்தது.
ஒரே ஒரு பசு மட்டுமே பால் கொடுக்கிறது. தினமும் 15 லிட்டர் பால் தருகிறது. தினமும் பால் சுரக்கவில்லை என்றால் பசுவின் மடி சேதமடையும், பசு இறக்கும் வரை பால் கொடுக்காது என்றார் சுப்பாராவ். இது மாடு வைத்திருப்போருக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

இரண்டு மாடுகளுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மாடுகளை பொது இடத்தில் புல் தின்றால், மாடுகளின் உரிமையாளரை வரவழைத்து அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அதை விடுத்து பேசத்தெரியாத ஜீவனை மயக்க ஊசி போட்டு கால்களை கட்டி தர் தர வென இழுத்துச் செல்வது என்பது மிருகங்களுக்கு எதிராக விளைவிக்கப்படும் கொடுமையாகும் என்றார் சுப்பாராவ்.

பசு மாடுகளின் உரிமையாளர்கள் உணவு மற்றும் பால் சுரக்க விலங்கு காப்பகத்திற்கு செல்ல விரும்பும் போது, ​​அவர்களுக்கு அனுமதி தரப்பட வில்லை. மாடுகள் கருவுற்றுள்ளன. மாடுகளை இறந்தவர் போல் இழுத்துச் செல்வதை ஏற்க முடியாது. பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்காக இரண்டு பசுக்களையும் விடுவிக்குமாறு செபராங் பிறை மாநகர் மன்றத்தை நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.

என் வி சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்