கிள்ளான் தெலுக் காங் ஆற்றை உடனடியாக காப்பாற்றுங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி:  12.04.2025

மிகப்பெரிய மாசுபாட்டால் தூய்மைகேடு அடந்துவரும் கிள்ளான் துறைமுகத்தில் அமைந்துள்ள தெலுக் காங் ஆறு காப்பாற்றப்பட வேண்டும் என  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம், சுற்றுச்சூழல் துறை  மற்றும்  கிள்ளான் நகர  சபை ஆகியவை மாசுபாட்டால் இப்போது கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ள தெலுக் காங் ஆற்றை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் தலைவர்  முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல்,

Gambar Utusan Malaysia

குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றில் உள்ள பல்வேறு வகையான உயிர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வருமான ஆதாரத்தையும் அச்சுறுத்தும் என்பதால், இந்த சம்பவம் தங்களுக்கு வருத்தத்தை தருவதாக அவர் தெரிவித்தார்.

நிலைமை தீவிரமடையும் வரை இந்த பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தரப்பினரால் நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? சிலாங்கூரில் உள்ள அங்கீகாரம் பெற்ற சுயாதீன ஆய்வகத்தின் மூலம் தெலுக் காங்கைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நான்கு துணை ஆறுகளிலிருந்து  20 கிலோமீட்டர் வரையிலான நீரின் தர சோதனைகள் தண்ணீரில் அம்மோனியாவின் உள்ளடக்கம் மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது மிகவும் வருத்தத்தை தருகிறது என்றார் முகைதீன்.

அதுமட்டுமின்றி, உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை , மற்றும் இரசாயன ஆக்ஸிஜன் தேவை  ஆகியவையும் தேசிய நீர் தர தரநிலைகளின்  படி சாதாரண அளவை விட அதிகமாக உள்ளன. அவை மிகவும் மாசுபட்ட வகையான ‘வி’ வகுப்பில் உள்ளன.

கரிம மாசுபாட்டின் அளவு அல்லது மொத்த கரிம கார்பன்  மற்றும் மிக அதிகமான அம்மோனியா அளவுகள் ஆகியவை ஆற்றின் நீர் ஆதாரத்தை நச்சுத்தன்மையுடையதாக ஆக்குகிறது. மீன் உட்பட, அதில் அதில் எந்தவிதனான கடல் உயிர்யினங்களும் வாழமுடியாது.

சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைகள் இருப்பதாலும், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கழிவுகளை அகற்றுவதாலும் தெலுக் காங் பகுதி மாசுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக, இந்த பிரச்சனை திறம்பட தீர்க்கப்படுவதையும், மீண்டும் நிகழாமல் இருப்பதையும் உறுதிசெய்ய முழுமையான விசாரணை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது. சுற்றுச்சூழல் தர சட்டம் 1974 ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மாநில தரப்பினர் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

மீனவர்களின் பிடிப்புகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வருமான ஆதாரம் குறைவதற்கு வழிவகுக்கும் இந்த விஷயத்தை மீன்வளத் துறை விசாரிக்க வேண்டும்.

மாசுபாட்டால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய உதவி அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர்  சங்கம்