குறைத்து கொள்ளுங்கள். இந்திய பயனீட்டாளர்களுக்கு பி.ப.சங்கம் வேண்டுகோள்.

உலகத்தையே பயமுறுத்தி கொண்டிருக்கும் கோவிட்-19, பலரது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்துள்ள இக்காலகட்டத்தில், நாம் மட்டும் இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்ற பணத்தை, பிறந்த நாளுக்கும், விருந்துகள் நடத்துவதற்கும் செலவு செய்து வருவது வருத்தம் தருவதாக உள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பிரிவினர் குறைந்த வருமானம் பெரும் வேலை செய்பவர்கள் தான். அதிலும் இந்தியர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் குறைந்த வருமானம் பெரும் இந்தியர்கள் தங்களுக்கு இருக்கின்ற சிறிதளவு பணத்தை, பிறந்த நாள் 


விழாவுக்கும், விருந்து நிகழ்வுக்கும் மற்றும் தேவையற்ற நிகழ்வுகளுக்கும் செலவு செய்வது வருத்தம் தருவதாக இருப்பதாக அதன் கல்வி அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்களின் கூற்றுப்படி, ஒரு சிலர் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை மிக பிரமாதமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மவெ 5000 வரையில் செலவு செய்துள்ளார்கள். 

வேறு சிலர் தங்களின் திருமண நாள் விருந்துக்கும், வேறு சில விருந்துக்கும் ஆயிரம் ஆயிரக்கணக்கான வெள்ளியை செலவு செய்து வந்திருப்பதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த கோவிட்-19 காலகட்டத்தில், சிலருக்கு வேலை பறிக்கப்பட்டு விட்டது, சிலருக்கு பாதி வேலை, வேறு சிலருக்கு சம்பளத்தில் குறைப்பு, இன்னும் சிலருக்கு சில மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்ய முடியும். 

இந்த பிரிவுகளில் இந்தியர்கள் தான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்ற விருந்துக்கும், விழாவுக்கும் ஆயிரக்கணக்கான வெள்ளியை செலவு செய்ய வேண்டுமா என சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

நம் கண் முன்னே வேறு சில பிரச்சினைகள் தலைவிருத்தி ஆடுகின்றன. வீட்டுக்கான உணவுகள், பலசரக்கு பொருட்களின் விலைகள், பள்ளி பேருந்து கட்டணம், வங்கி கடன் வட்டி, வாகன கடன் மற்றும் காப்புறுதி என பல பிரச்சினைகள் இருக்கும்போது, தேவையற்ற நிகழ்வுகளுக்கு பணத்தை செலவு செய்ய வேண்டுமா என சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

இன்னும் வேறு சிலர் தங்களின் பணத்தை பந்தையத்தில் விட ஆரம்பித்து விட்டனர்.

ஆகவே இப்பொழுது உள்ள சூழ்நிலையில், நம் இந்தியர்கள் தங்களின் பணத்தை கண்ட கண்ட நிகழ்வுகளுக்கு வாரி வாரி செலவு செய்வதை நிறுத்தி சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என என் வி சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
கல்வி,ஆய்வு பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

 பத்திரிக்கை செய்தி. 1.8.20