பத்திரிகைச் செய்தி 8.3.25
3 வயது குழந்தைகள், வேப் பற்றி அறிந்து கொள்ள இந்த மிட்டாய்கள் காரணமாக திகழ்கிறது.
உடனடியாக தடை விதிக்கப்பட வேண்டும்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.
ஒரு புதிய வகை வேப் மிட்டாய் குழந்தைகள் புகைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாட்டின் சந்தையில் நுழைந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலப் படுத்தியுள்ளது.
மிட்டாய் வடிவத்தில் உள்ள இந்த கெண்டி வேப் குழந்தைகளுக்காகவே சந்தையில் விற்கப்படுகின்றது.
மிட்டாய் கடைகளுக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மிகவும் விழிப்புடனும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கின்றார் அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ். இந்தப்புதிய வரவு மேலும் பல ஆயிரக்கணக்கான புதிய வேப் புகைப்போரை உருவாக்கும் என்றார் அவர்.
இந்த வேப் மிட்டாய்களை மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் வாங்குவதாக சில்லறை கடைக்காரர்கள் தங்களிடம் தெரிவித்தாக சுப்பாராவ் தெரிவித்தார்.
குழந்தைகள் சாக்லேட் போன்ற தோற்றமளிக்கும் ஆரோக்கியமற்ற தயாரிப்புகளுக்கு ஆளாகிறார்கள், ஆனால் உண்மையில் வேப்பிங் மற்றும் புகைபிடிக்கும் சாதனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிட்டாய்கள் இப்பொழுது சந்தையில் மிதக்க ஆரம்பித்துவிட்டன.
இதைவிட கொடுமை என்னவென்றால் போதைக்கு அடிமையானவர்கள் சுயமாக ஊசி ஏற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிரிஞ்சர் எனப்படும் ஊசிகள் போன்ற வடிவத்தில் கூட சாக்லெட் வந்துள்ளது. இதனை பயன்படுத்தும் போது ஊசியை குத்துவதை போல அழுத்த வேண்டும். பிறகு போலி ஊசியிலிருந்து சாக்லெட் வெளியாகும்.
ஆகவே போதை பித்தர் ஆகும் போது எப்படி ஊசியை பயன் படுத்துவது என்று 3 வயதிலேயே மிட்டாய் வடிவத்தில் சொல்லித்தருகிறார்கள் உற்பத்தியாளர்கள்என்றார் சுப்பாராவ். இவற்றின் விற்பனைக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்று தெரியவில்லை. அமலாக்க அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள்.
இந்த தயாரிப்புகள், பெரும்பாலும் வானவில் வண்ணத்தில் வண்ணமயமான மற்றும் கவர்ந்திழுக்கும், தோற்றத்துடன் வருவதால் குழந்தைகளை ஈர்க்கின்றன. ஆனால் இந்த மிட்டாய் தயாரிப்புக்கு பின்னால் ஒரு மறைக்கப்பட்ட ஆபத்து உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் இனிப்பு, சாக்லேட்டுகள், பழ பானங்கள் அல்லது லாலிபாப்கள் போன்ற தோற்றத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றன.
தீங்கற்றதாகத் தோன்றுவது உண்மையில் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுக்கான நுழைவாயில் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். சில தயாரிப்புகளில் திரவங்கள் மற்றும் நிரப்புதல்கள் கூட உள்ளன, இதனால் எப்படி வேப்பில் திரவத்தை நிறப்புவது என்பதை சிறு வயதிலேயே சொல்லித்தருகின்றார்கள்.
இந்த போக்கு அடுத்த தலைமுறைக்கு புகைபிடித்தல் மற்றும் வேப்பிங் செய்வதை எப்படி என்று சொல்லித்தருகின்றன. மேலும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த தயாரிப்புகள் ஆறு மாதங்களுக்கு முன்பே சந்தைகளில் வர ஆரம்பித்துவ்விட்டதாக சுப்பாராவ் கூறினார்.
இந்த ஏமாற்றும் பேக்கேஜிங் மூலம் இளம் குழந்தைகள் தங்களை அறியாமலேயே ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு அறிமுக ஆகிவிடுகின்றனர். இந்த தயாரிப்புகளில் விபர லேபிள்கள் இல்லாதது இன்னும் கவலை தருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர்.
உண்மையில் இந்த ‘மிட்டாய்’ மோகம் ஒரு முழுமையான தொற்றுநோயாக மாறுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்களிடையே புகைபிடிக்கும் விகிதம் குறைந்திருந்தாலும், வேப்பிங் மற்றும் மின்னியல் சிகரெட் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், புதிய தலைமுறை குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக திகழ்வார்கள். இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இளைய தலைமுறையினர் நிகோடினை விட அதிகமான போதைக்கு அடிமை ஆகிவிடுவார்கள் என்றார் சுப்பாராவ்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்