பத்திரிகை செய்தி. 19.11.21
கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள மாடா பகுதிகளில் உள்ள வடிகால் மற்றும் ஆறுகள் குப்பை மற்றும் நச்சு பொருட்களால் மாசுபாடு அடைந்திருப்பதால் அதனை தீர்க்க மாடா என்ற மலேசிய விவசாய மேம்பாட்டு வாரியம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விவசாயிகள் பயன்படுத்தும் விஷக் கொள்கலன்கள் உட்பட காகிதம், காலி டின்கள், நெகிழி பாட்டில்கள், மரம் மற்றும் தாவரக் கழிவுகள் போன்ற பல்வேறு கழிவுப் பொருட்களால் அப்பகுதியில் உள்ள நீர்ப்பாசன அமைப்பு மாசுபட்டுள்ளது என பி.ப.சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அலட்சிய போக்கே இம்மாதிரியான சம்பவங்களுக்குக காரணம் என அவர் சொன்னார்.
இங்குள்ள பாசனத் திட்டத்தில் கழிவுகளை தன்னிச்சையாகக் கொட்டி குவித்ததால் சுற்றுவட்டாரப் பகுதி மாசுபடுகிறது.
அதோடு கொள்கலன்களில் காணப்படும் ரசாயனக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கும், மனித உயிர்களுக்கும் கேடு விளைவிப்பதால் மிகவும் ஆபத்தானது.
இந்த பகுதியில் உள்ள கோண்டாங் நத்தைகள் மற்றும் எலிகளின் அச்சுறுத்தலை ஒழிக்க,நம் நாட்டில் தடை விதிக்கப்பட்ட நச்சு கொள்கலனும் இங்கு பயன் படுத்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
தற்போது அழிந்து வரும் நன்னீர் மீன்களின் காரணத்திற்கும் இந்த நச்சு ரசாயனம்தான் காரணம்.
இந்த கழிவுகளை அகற்றும் செயல் மற்றும் நடைமுறை நெல் வயல்களுக்கான நீர் விநியோகத்தையும், அது அடைத்து, தண்ணீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தினால், திடீர் வெள்ளத்தையும் பாதிக்கும்.
எனவே, வேளாண்மைத் துறை, நீர்பாசன துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழக்கமான கண்காணிப்பு மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்களை உறுதியாகவும் திறம்படவும் செயல்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல் தேசிய நெல் வயலாக மாடாவை வெற்றிகரமாக நிர்வகிக்கவும் முடியும் என்று பி.ப.ச்ங்கம் நம்புகிறது என முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்