சாலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் இருக்கவும்
ஜீரோ விபத்து என்ற விபத்தில்லாத தினம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக
26 ஆகஸ்ட் 2024 அன்று பூஜ்ஜிய விபத்து தினமாக அதாவது விபத்தில்லாத தினமாக ஒரு கூட்டு முயற்சியில் அனைத்து சாலை பயனர்களும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்யும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பி.ப சங்கம் வலியுறுத்த விரும்புவதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் சொன்னார்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட, அரச மலேசிய காவல்துறையால் சேகரிக்கப்பட்ட சாலை விபத்து மற்றும் இறப்பு தரவுகளின் தரம் மற்றும் துல்லியம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கமும் சாலைப் பயனாளர்களும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்காத வரையில் அர்த்தமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களுக்கு பள்ளங்கள், குழிகள் மற்றும் சீரற்ற சாலை மேற்பரப்புகள் கணிசமாக பங்களிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிகின்றன. மலேசியாவில், சுமார் 60% கூட்டரசு சாலைகள் அவற்றின் தரம் குறைந்து விட்டதோடு, அவற்றிற்கு அவசர பழுதுபார்ப்பு தேவைப்படுவதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன என்றார் முகைதீன்.
அதிக பாரம் ஏற்றப்பட்ட வணிக வாகனங்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கும் அதே வேளையில், இந்த சாலைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் முன்கூட்டியே சாலை சேதம் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
2008 ஆம் ஆண்டில், நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் வணிக வாகனங்களில் 27% அதிக பாரம் ஏற்றப்பட்ட வாகனங்கள்தான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முதல் மூன்று ஆண்டுகளில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது. சேதமடைந்த சாலைகள், பள்ளங்கள் உள்ளிட்டவை விபத்துகளுக்கு முக்கிய காரணியாக இருந்துள்ளன.
மேலும், சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான மலேசிய நிறுவனமான மீரோஸ் கூறுகையில் 25% அபாயகரமான விபத்துக்களில் கனரக வாகனங்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், மலேசியாவில் 17,244,978 கார்கள், 16,773,112 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,429,403 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் இருந்துள்ளன.
915,494 பேருந்துகள், வாடகை க்கார்கள் மற்றும் இந்த வகைகளில் வராத பிற வாகனங்கள்.
பொதுப் போக்குவரத்தில் தனியார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிகம் நம்பியிருப்பது போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் மற்றும் மன அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் கவலையளிக்கிறது.
புகாரளிக்கப்படாத பல “சிறிய” சம்பவங்களுக்குப் புகாரளிக்கப்பட்ட விபத்துக்கள் கணக்கில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
கோவிட்19 க்குப் பிறகு, விபத்துகளில் குறிப்பிடத்தக்ப்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அடிக்கடி பலியாகின்றனர், அதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர்கள்.
ஆண்டு
|
சாலை விபத்துகளின் எண்ணிக்கை | சாலை விபத்துகளின் மரணங்கள் |
2014 | 476,196 | 6,674 |
2015 | 489,606 | 6,706 |
2016 | 521,466 | 7,152 |
2017 | 533,875 | 6,740 |
2018 | 548,598 | 6,284 |
2019 | 567,516 | 6,167 |
2020 | 418,240 | 4,634 |
2021 | 370,286 | 4,539 |
2022 | 545,588 | 6,080 |
2023 | 600,000 | 6,443 |
விபத்துகளைத் தடுக்க அனைத்து சாலைப் பயனாளர்களும் முறையான சாலை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இது உயிரிழப்புகளால் மட்டுமே அளவிடப்படக்கூடாது.
முழுக்க முழுக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் திறமையான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
பொதுப் போக்குவரத்தின் வெற்றி நான்கு காரணிகளைச் சார்ந்துள்ளது: மலிவு, வசதி, பேருந்துகள் கிடைப்பது ஒழுங்குமுறை மற்றும் நேரமின்மை. 15 ஆண்டுககுக்கு மேற்பட்ட கார்களுக்கான ஆயுள் முடிவு, கொள்கைகள், மத்திய வணிக மாவட்டங்களுக்குள் நுழையும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் மற்றும் 2 மணி நேர பார்க்கிங் போன்ற வாகன உரிமையைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என முகைதீன் வேண்டுகோள் விடுத்தார்.
மலேசியா தனியார் வாகன உரிமையைக் குறைக்க வேண்டும். திறமையான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மேலும் விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், குறைந்த கட்டணத்தில் அபராதம் வசூலிக்க இந்த வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் வகையில், போக்குவரத்து அபராதங்களில் கணிசமான தள்ளுபடியை அரசாங்கம் அவ்வப்போது வழங்குவது குழப்பமாக உள்ளது.
1990 முதல் ஜூன் 2024 வரை மவெ 41 மில்லியன் போக்குவரத்து குற்றத்திற்கான தொகை. இதில் சுமார் மவெ 4 பில்லியன் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் செலுத்தப்படாமல் உள்ளது என்று சமீபத்திய செய்தி வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை தருகிறது.
இவற்றில் 51,128 அபராதங்களின் மொத்த தொகையான மவெ 5.1 மில்லியன் ரிங்கிட் சிங்கப்பூர், புருனை, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரின் வாகனமோட்டிகள் சம்பந்தப்பட்டவை. தள்ளுபடிகள் இருந்தபோதிலும், மலேசியர்கள் அபராதமாக மவெ 4 பில்லியனில் பெரும்பகுதியை செலுத்த வேண்டும்.
அரச மலேசிய காவல்துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை ஆகியவை அபராதம் செலுத்தப்படாதவர்களுக்கான சாலை வரி புதுப்பித்தலை கொடுக்காமலிருக்க தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். வெளிநாட்டுப் பிரஜைகள் அபராதம் செலுத்தும் வரை மலேசியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்.
பூஜ்ஜிய விபத்தை அதாவது விபத்திலாத தினத்தை அடைய அனைத்து சாலை பயனர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து கூட்டு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
சாலை பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பது, கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், நமது சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
பாதுகாப்பு நமது பகிரப்பட்ட முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை பாதிப்பின்றி வந்தடைவதை உறுதிசெய்ய வேண்டும். பாதுகாப்பான சாலைகளை நோக்கிய பயணத்திற்கு நாம் ஒவ்வொரும் பொறுப்பேற்க வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்