கோழி முட்டை பற்றாக்குறையை உடனடியாக தீர்க்கவும் – பி.ப.சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 8.11.22

சந்தையில் ஏற்பட்டுள்ள கோழி முட்டை பற்றாக்குறை பிரச்சினையை விவசாய அமைச்சு உடனடியாக தீர்க்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“பெரும்பாலான மளிகைக் கடைகளும் பொதுச் சந்தைகளிலும் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே முட்டைகளை பெருவதில் சிரமத்தை எதிர் நோக்கியதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

கோழி முட்டைகள் அதிக புரதச் சத்து கொண்டது. ஒரு மலிவான உணவாகும்.

பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் மீதான சிறப்பு பணிக்குழு, கோழி முட்டை விநியோகம் மற்றும் அதன் பற்றாக்குறைக்கு, கோழி தீவனத்தின் அதிக விலையே காரணம் என சமீபத்தில் அறிவித்தது.
கோழிப்பண்ணையாளர்களிடம் கலந்து ஆலோசித்து சீரமைப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என முகைதீன் கேள்வி எழுப்பினார்.

தீவனத்தின் விலை முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், பனை கருவைக் கழிவுகளைப் பயன்படுத்தி மலிவான தீவனத்தை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து உள்ளூர் தீவன உற்பத்தியாளர்களுடன் பணிக்குழு விவாதித்ததா? என்பதை அறிய விரும்புகின்றோம்.

1980 களில் இருந்து பனை கர்னல் கேக்கை ஒரு கால்நடை தீவனப் பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான ஏராளமான ஆய்வுகள் உள்ளன.

சிலாங்கூர் தேசிய பல்கலைக்கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் மாற்று கால்நடைத் தீவனத்தை வழங்கும் முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்தது.

இந்த முறை கெடாவில் செயல்படுத்தப்பட்டு, தீவனத்தின் விலையை கணிசமாகக் குறைத்தது கண்டறியப்பட்டது.

மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அளவு சந்தைகளில் உள்ள வர்த்தகர்களை விட குறைவாக இருப்பதால், தங்களுக்கு வினியோகம் கிடைப்பது கடினம் என்று மளிகை வியாபாரிகள் கூறியதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்