பத்திரிகை செய்தி. 6.1.22
சுங்கைப்பட்டாணி அருகே உள்ள, கம்போங் பாரு, புலாவ் தீகாவில் வசிப்பவர்களுக்கு தங்குவதற்கு உடனடியாக வீடுகள் தேவைப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் அப்பகுதியில் நில உரிமையாளர் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவை பெற்ற பின் அவகாசம் இன்றி இவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டதாக பி.ப.சங்க தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.
இந்த 30 குடும்பங்களின் வீட்டுப் பிரச்சனையை தீர்க்க கெடா மாநில அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் கேடுக் கொண்டார்.
பல தசாப்தங்களாக இயற்கை இங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது தங்களது வீடுகள் உடைக்கப்பட்டதால் ஒரு சோகமான மற்றும் அமைதியற்ற சூழ்நிலை இங்கே உருவாக்கியுள்ளதால், இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தங்களின் வீடுகள் உடைக்கப்பட்டதால் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதில் 20க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். வேறு சிலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதில் வேதனைபடக்கூடிய விசயம் என்னவெனில் தங்குவதற்கு இடமே கிடைக்காத சிலர் அருகிலுள்ள சதுப்பு நிலக் காட்டில் கூடாரத்தின் கீழ் தஞ்சம் அமைந்திருப்பது கண்ணீர் வரவழைத்து ள்ளது.
சிலர் இன்னும் ஆவலுடன் காத்திருந்தாலும், இந்த நேரத்தில் அவர்கள் சுமக்க வேண்டிய சுமையை குறைக்க சம்பந்தப்பட்ட தரப்பினரால் எந்த இழப்பீடும் அல்லது உதவியும் இல்லை என்பது இன்னும் வேதனையானது என முகைதீன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் அரசாங்க ஓய்வு பெற்றவர்கள், மீனவர்கள், சிறு வியாபாரிகள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் என இருக்கின்றனர்.
இவர்களின் மாத வருமானம் 300 முதல் RM1,000 வரைதான்.
ஒரு நாளைக்கு 10.00 ரிங்கிட் வருமானம் கொண்ட பலகாரங்கள் விற்கும் பணத்தை நம்பி இருக்கின்ற அகமட் என்பவர் மழை மற்றும் வெயிலில் இருந்து தஞ்சம் அடைய விரைவில் ஒரு வீட்டை வழங்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை எந்த தரப்பினரும் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை ஆய்வு செய்து தீர்வு காண முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.
கடந்த 30 டிசம்பர் 2021 அன்று, பல்வேறு முயற்சிகள் மற்றும் முறையீடுகள் அரசாங்கத்திடம் இருந்து உரிய கவனத்தைப் பெறாததால் ஏற்பட்ட விரக்தியைத் தொடர்ந்து, அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா நெகிரிக்கு முன்னால் கிராம மக்கள் அமைதியான ம்றியலை நடத்தினர்.
இந்த மோசமான சூழ்நிலையைத் தீர்க்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது இவர்கள் வீடுகளை மட்டும் இழக்கவில்லை. போதிய வருமானமும் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
ஆகவே கெடா மாநில அரசு இதற்கு ஒரு தீர்வை மேற்கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்