பத்திரிகை செய்தி 27.2.22
உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என
வேண்டுகோள் விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
ஓமிக்ரான் தொற்றின் விரைவான பரவல் காரணமாக கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருகின்றது.
ஆனால் சந்தையில் விற்கப்படும், இந்த சுய பரிசோதனை கருவிகள் எந்த அளவுக்கு சரியான தகவல்களை தருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் போலி அல்லது அங்கீகரிக்கப்
படாத பரி சோதனைக் கருவிகளை சிலர் விற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மருந்தகங்கள், 7 லெவன், 24 மணி நேர பொருள் விற்பனை போன்ற பல்வேறு கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் , பி.ப சங்கம் ஆய்வு நடத்திய போது, இந்த இடங்களில் கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த விற்பனை மருத்துவ சாதன ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை அறிய பி.ப சங்கம் விரும்புகிறது என்றார் முகைதீன்.
கோவிட் 19 சுய-பரிசோதனை கருவிகளின் விற்பனையை மருந்தகங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமே விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பற்ற நபர்கள் போலியான அல்லது அங்கீகரிக்கப்படாத கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளை ஆன்லைனில் விற்கலாம் என்ற கவலையும் உள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சு ஆன்லைன் தளங்களில் சுய-பரிசோதனை கருவிகளின் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
தவறான-எதிர்மறை சோதனை முடிவுகள் ஒரு நபரை மனநிறைவுக்கு ஆளாக்கும், இது தொற்றல் பரவுவதற்கு உதவுவதோடு, ஆரம்பகால மருத்துவ தலையீட்டையும் இழக்கச் செய்யும்.
ஆகவே ஒரு பயனீட்டாளர் மிக எளிதாக சுய பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு, மலேசிய மருந்து ஆணையம் துல்லியமான வழிமுறைகளை கண்டறிந்து, பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்