பத்திரிகை செய்தி. 24.3.22
சுய பரிசோதனை கருவிகளின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.
பி.ப.சங்கம் குற்றச்சாட்டு.
சுய-பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி கோவிட்-19க்கான உமிழ்நீர் சோதனை மற்றும் மூக்கு வழி சோதனை முறைகளை செய்வோருக்கு முரண்பாடான முடிவுகள் தெரிவதாக பல பயனீட்டாளர்கள் தங்களிடம் புகார் கூறியுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
சில பயனீட்டாளர்கள் தாங்கள் மேற்கொண்ட மூக்கு வழி சோதனைக்கும் , உமிழ் நீர் சோதனைக்கும் வேறுபாடுகள் இருப்பதை தாங்கள் தெரிந்து கொண்டதாக தங்களிடம் புகார் செய்திருப்பதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.
கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகள் நேர்மறையான முடிவுகளை காட்டுவதாக பல பயனீட்டாளர்கள் குறைபட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
மூக்கு வழி செய்யப்படும் சோதனை ஒரு முடிவையும் அதே நேரத்தில் உமிழ்நீர் சோதனை வேறுவிதமான முடிவையும் காட்டுகின்றது.
இரண்டிற்க்கும் ஒரே மாதியான சுய பரிசோதனை கருவிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த தவறான எதிர்மறையான முடிவுகள் பயனீட்டாளர்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக முகைதீன் கூறினார்.
சில வீடுகளில் கோவிட்-19 இல்லை என்ற அறிகுறிகளுடன் உள்ள குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர், அதே சமயம் சோதனை நடத்திய சிலருக்கு அறிகுறிகள் இருந்துள்ளன. இது குடும்ப உறுப்பினர்களிடையே பயத்தையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
தவறான எதிர்மறைகளை உருவாக்குவதன் மூலம் சுய-பரிசோதனை கருவிகள் குறைவான உணர்திறன் கொண்டதாக இருந்தால், மக்கள் தங்கள் அறிகுறிகள் கோவிட் தொடர்பானவை அல்ல என்றும் சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கலாம் என்றும் எண்ணுவர்.
சுய பரிசோதனை முடிவுகள் தங்களுக்கு சாதகமான அறிகுறிகளை காட்டினால் அவர்கள் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
தங்கள் சுய பரிசோதனையை மேற்கொள்ளும் பொறுப்பை பொதுமக்களிடமே சுமத்துவது, பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து திறம்பட தனிமைப்படுத்தாது, அதே நேரத்தில், சுகாதார அமைச்சின் புள்ளிவிவர சேகரிப்பில் பெரும் முரண்பாடுகள் இருக்கும்.
சுய-பரிசோதனை கருவிகள் உண்மையான முடிவுகளை தராது என்றால் சுகாதார அமைச்சு ஏன் மக்களை தங்கள் சொந்த பரிசோதனையை நடத்தும்படி வலியுறுத்துகிறது என முகைதீன் கேள்வி எழுப்பினார்.நாட்டின் எல்லைகள் திறக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளை சாதகமாக அடையாளம் காணவும், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் போதுமான உணர்திறன் கொண்ட சோதனைக் கருவிகள் இல்லை என்றால், எல்லைகள் திறந்திருக்கும் போது வைரஸின் புதிய தொற்றுக்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்படலாம் என்று தாங்கள் கவலைப்படுவதாக முகைதீன் அப்துல் காதர் ஒர் அறிக்கையில் கூறினார்
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்