செபராங் பிறை அருகிலுள்ள சுங்கை மூடா ஆற்றில் குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள்.

பத்திரிகை செய்தி. 9.12.21

அப்புறப்படுத்தாவிடில் ஆபத்துதான். எச்சரிக்கை விடுக்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

பட்டர்வொர்த், செபராங் பிறை அருகே உள்ள சுங்கை மூடா என்னும் ஆற்றில் நெகிழி குப்பைகள் குவிந்து காணப்படுவதால், அந்த ஆறு மாசுபாடு கண்டு தூய்மைகேடு படுத்தப்படுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் உள்ளூர் மாநகர அதிகாரிகள் அருகே உள்ள சுங்கை மூடா ஆற்றை, மாசுபடுத்தும் கழிவுகளை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதந் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.

குவியல் குவியலான பொருட்கள், குறிப்பாக ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் கொள்கலன்களால் சுற்றுப்புறம் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

கெடா மற்றும் பினாங்கில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கான முக்கிய நீர் ஆதாரமாக சுங்கை மூடா ஆறு உள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், ஆற்றின் நீரின் தரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி, நோய் பரவலைத் தூண்டும் என முகைதீன் குறிப்பிட்டார்.

கழிவுகளில் நச்சுத்தன்மை இருந்தால் அது சுற்றுச்சூழல், நதி மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்க்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் அஞ்சுகின்றோம். இது கவலை தரக்கூடிய ஒரு பிரச்சனையாகும்.

இந்தக் கழிவுகளை அப்படியே விட்டுவிட்டால், அது அருகிலுள்ள கடற்கரைகள் மற்றும் கடலையும் மாசுபடுத்தும், மீனவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று பி.ப சங்கம் நம்புகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு இலாக்காக்கள் விசாரணை நடத்தி, இந்த பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்துவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறுபவர்களை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கும், உள்ளூர்வாசிகளின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் இந்த கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.என
பி.ப.சங்கம் நம்புவதாக முகைதீன் கூறினார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்