ஜி.இ.ஜி எனப்படும் புதிய தலைமுறையினருக்கான புகையிலையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சட்டத்தைத் தாமதமின்றி இயற்றுங்கள்.

பத்திரிகைச் செய்தி : 30.05.2024
உலக புகையிலை எதிர்ப்பு தினம் (31 மே 2024)

 

ஜி.இ.ஜி எனப்படும் புதிய தலைமுறையினருக்கான
புகையிலையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான
சட்டத்தைத் தாமதமின்றி இயற்றுங்கள்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்!

மலேசியாவில் தினமும் 80 பேர் புகையால் புகையாகிக் கொண்டு வருகின்றனர்.

முந்தைய நாடாளுமன்ற சிறப்புக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமுறையினருக்கான புகையிலையை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்துமாறு அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டமானது புகைபிடித்தல் மற்றும வேப்பிங் போன்ற சமூக நோயை அகற்றுவதற்கான பாதையை வழங்குகிறது என அச்சங்கத்தின்  தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற ஆய்வில், மலேசிய இளம் பருவத்தினரின் ஆரோக்கியம்  2022ல், “65.7% பேர் சிகரெட் புகைப்பதைத் தொடங்கினர் என வெளிபடுத்தியுள்ளது. மேலும் 48.5% பேர் முறையே 14 வயதிற்கு முன்பே மின்னியல் சிகரெட் மற்றும் வேப் பயன்பாட்டைத் தொடங்கினர்” என்றும் அந்த அறிக்கை மேலும்  வெளிப்படுத்தியுள்ளது.

உலகளவில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 37 மில்லியன் குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் பல நாடுகளில், இளம் பருவத்தினரிடையே மின்னியல் சிகரெட் பயன்பாட்டின் விகிதம் பெரியவர்களை விட அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது என்றார் முகைதீன். குழந்தைகள் புகைபிடிக்கும் பழக்கத்தை விரும்புவதற்கான காரணங்களில், அவர்கள் ஆர்வத்தின் காரணமாகவும், அந்தப் பழக்கம் அவர்களை மகிழ்ச்சிபடுத்துவதாக  நினைத்துக் கொண்டதும் ஒரு காரணம் ஆகும்.

புகையிலை, மின்னியல் சிகரெட் அல்லது வேப்பிங் பொருட்கள் ஆகியவற்றில் உள்ள நிகோடின் மிகவும் அடிமையாக்கும் மற்றும் உள்ளிழுக்கும் இரசாயனங்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை இளையோர் மற்றும் குழந்தைகள் புரிந்து கொள்ளவில்லை.

குழந்தைகளை அடிமைப்படுத்தும் பழக்கத்திற்குக் கவர, மின்னியல் சிகரெட்/வேப் தொழில் துறை மற்றும் புகையிலை தொழில்துறை குழந்தைகளை ஈர்ப்பதில் பயன்படுத்திய உத்திகளை பின்பற்றுகிறது, குறிப்பாக கவர்ச்சிகரமான தயாரிப்பு சுவைகள், பேக்கேட் வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்கள் என முகைதீன் எடுத்துரைத்தார்.

2009 ஆம் ஆண்டில் புகையிலை பேக்கேட்டில் சித்திர எச்சரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட

ஆண்டுகளில், சிகரெட் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பேக்கேஜிங் மற்றும் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முற்பட்டன. இந்த சுவைகள்  பருவமடைந்த புகைப்பிடிப்பவர்களை விட,  இளைஞர்களை அதிக அளவு ஈர்க்கின்றன.

மின்னியல் சிகரெட்/வேப் தொழில்துறையினர் நிகோடினை விஷச் சட்டத்தில் இருந்து அகற்ற விரும்புவதற்குக் காரணம், நிகோடின் மிகவும் அடிமையாக்கும் மற்றும் புகைப்பிடிப்பவர் அல்லது வேப் புகைப்பவர் அந்தப் பழக்கத்தைத் தொடர உறுதி செய்யும் இரசாயனக் கூறுதான்.

நச்சுச் சட்டத்தில் இருந்து நிகோடினை வெளியேற்றுவதில் அரசாங்கம் ஒரு பயங்கரமான தவறைச் செய்துள்ளது, ஏனெனில், சட்டத்தின்படி மின் திரவங்கள் அவற்றின் நிகோடின் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கும் போது, ​​தயாரிப்பு லேபிள்களில் உண்மையான நிகோடின் உள்ளடக்கம் பட்டியலிடப்படவில்லை என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நிகோடின் அடிமையான தலைமுறைகளை உருவாக்குவதை நிறுத்துவதற்கான ஒரே வழி, ஜி.இ.ஜியின் சட்டத்தின்படி புகைபிடித்தல்/வேப்பிங் தயாரிப்புகளை படிப்படியாக அகற்றுவதுதான். இல்லையெனில், பழக்கம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைக்கு அதிக செலவில் நாட்டிற்கு சுமையை ஏற்படுத்தும்.

தனிடையே மலேசியாவில் புகைக்கும் காரணத்தால்

தினந்தோறும் 80 பேர் மரணமடைவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சிகரெட் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒருங்கினைப்பாளரும் கல்வி அதிகாரியுமான என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

கணிசமான பள்ளிக்குழந்தைகள், கடைகளிலோ அல்லது நண்பர்களால் எளிதாகக் கிடைக்கும் வேப்பைப் பயன்படுத்துகின்றனர் என்பதை பி.ப சங்கம் கண்டறிந்துள்ளது. எனவே, புகையிலை பொருட்கள் மற்றும் மிந்னியல் சிகரெட்/வேப்களைப் பயன்படுத்தும் சமூக நோய்க்கு மலேசியர்கள் பலியாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து மலேசியர்களின் நலனுக்காக அரசாங்கம் உடனடியாக ஜி இ ஜி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதையும் பி.ப.சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் 29,457 சிகரெட் புகைப்பாளர்கள் மரணமடைகின்றனர் என்றும் சுப்பாராவ் கூறினார். உலகளவில் ஆண்டுதோறும் 8 மில்லியன் புகைப்பாளர்கள் மரணம் அடைகின்றனர்.

முகைதீன்  அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்