தேர்தலைப் பற்றியும் தேர்தலின் முடிவைப்பற்றியுமே பேசிக்கொண்டிருக்காமல் பயனீட்டாளர்கள் எதிர் நோக்கும் விலைவாசி உயர்வைப்பற்றியும் சிந்தியுங்கள்.

பத்திரிகை செய்தி. 23.11.21

காய்கறிகளின் விலைகள் 200 விழுக்காடு வரை உயர்வு. பயனீட்டாளர்கள் அவதி!
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கடந்த இரண்டு வாரங்களில் காய்கறிகளின் விலைகள்
கண்மூடித்தனமாக உயர்வு கண்டிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சுமார் 200% வரை காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளது என அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

சாதாரண மக்களால் விரும்பி வாங்கி உண்ணும் காய்கறிகளின் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு மற்றும் பாமா எனப்படும் கூட்டரசு விவசாய விற்பனை வாரியம் இப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காலிஃபிளவர்
பழைய விலை மவெ 7.00, புதிய விலை
மவெ16.00. விலை உயர்வு
100%.

சாவி பெண்டேக் (சோய் சம்)
பழைய விலை மவெ 3.00, புதிய விலை
மவெ 9.00. விலை உயர்வு
200%.

ப்ரோக்கோலி
பழைய விலை மவெ 8.00. புதிய விலை
மவெ 20.00. விலை உயர்வு
150%.

சாவி. பழைய விலை
மவெ 5.00, புதிய விலை
மவெ 8.00. விலை உயர்வு
60%.

பீன்ஸ் (ககாங் புன்சிஸ்). பழைய விலை
மவெ 8.00. புதிய விலை
மவெ 15.00. விலை உயர்வு
88%.

முட்டைக்கோஸ். பழைய விலை
மவெ 4.00. புதிய விலை
மவெ 6.00. விலை உயர்வு
50%.

சிவப்பு மிளகாய். பழைய விலை
மவெ 13.00 புதிய விலை
மவெ 19.00. விலை உயர்வு
46%.

பச்சை மிளகாய். பழைய விலை
மவெ 10.00. புதிய விலை
ம.வெ 14.00. விலை உயர்வு
40%.

வரும் வாரங்களில் மற்ற காய்கறிகளின் விலைகள் உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் எச்சரித்ததாக பல சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம் புகார் தெரிவித்ததாக முகைதீன் கூறினார்.

உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்கப் பிரிவு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். 50 ரிங்கிட்டை சந்தைக்கு எடுத்து சென்றால் மூன்று காய்கறிகள் கூட வாங்க முடியவில்லை என குடும்ப மாதர்கள் குறைபட்டுக்கொண்டனர்.

விவசாயம் மிகுந்த நாட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவது ஆச்சிரியமாக இருக்கின்றது.

அரசியல்வாதிகள் பயனீட்டாளர்கள் எதிர் நோக்கும் இது போன்ற வாழ்வாதார பிரச்சனைகளை களைய நடவடிக்கையில் இறங்க வேண்டும் என முகைதீன் கேட்டுக் கொண்டார்.

மேலும் தங்கள் விலைகளை அதிகமாக உயர்த்தி, லாபத்திற்கு எதிரான சட்டத்தை மீறும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்

காய்கறிகளின் விலை மற்றும் சந்தை வினியோக முறையில் பாமா கடைபிடிக்கும் மெத்தன போக்கு கவலை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்