நிபோங் திபால். சுங்கை கெரியன் ஆறு அபாயத்தில். கரை அரிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.


சுங்கை கெரியன் ஆற்றங்கரைகள் மோசமடைவதற்கு முன்னர் மேலும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை இலாகாவைச் ,மலேசிய பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தனியக்கம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், சுங்கை கெரியன் ஆற்றங்கரை அரிப்புக்கு தீவிரமான மற்றும் உடனடி கவனம் தேவைப்படுவதால், ஆற்றங்கரையின் பல பகுதிகள் பெருகிய முறையில் அரிக்கப்பட்டு வருகின்றன அவ்வியக்கத்தின் தலைவர் திருமதி மீனாட்சி ராமன் தெரிவித்தார்.

அரிப்புக்கான காரணம் பல்வேறு காரணிகளால் இருக்கலாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து காரணிகளையும் ஆய்வு ஆய்வு செய்ய வேண்டும் என மீனாட்சி கூறினார்.

மேலும் அரிப்பு ஏற்படுவதைத் தணிக்கவும் தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பூவுலகின் நண்பர்கள் பேட்டி கண்ட பல மீனவர்கள் இந்த அரிப்புக்கு ஒரு முக்கிய காரணம் பெரிய படகுகள் உருவாக்கிய அலைகள் என்றும் மற்றும் ஆற்றின் குறுக்கே முன்னும் பின்னுமாக சரக்குகளை பெரிய படகுகள் இழுத்துச் செல்வதால் இப்பிரச்சினை ஏற்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என அவர் கூரினார். நிபோங் திபால், ஜலான் பான் சுங்கை டோக் டன்டோங்கில் அமைந்துள்ள மீன் தரையிறங்கும் தளத்தில் உள்ள மீனவர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
[07/04, 14:45] Subbarow Narayanan: உண்மையில், இந்த ஆற்றங்கரை மீனவர்கள் கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றுள்ளனர்.

பல பெரிய படகுகள் சுங்கை கெரியனை ஒரு முக்கிய பாதையாக தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறறில் படகுகள் ஓடும் போது ஆற்றங்கரை அரிப்புக்கு மட்டுமல்ல, அவற்றின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டிருக்க. வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, ஆற்றங்கரைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள மீன்வளர்ப்பு குளங்களின் எண்ணிக்கையும் அரிப்புக்கு காரணமான காரணிகளிலும், ஒன்று என அவர்கள் தெரிவித்துள்ளனர். கெரியன் ஆற்றில்

மேலும் வெளியேற்றப்படும் கழிவுகளால் ஆற்றின் நீரின் தரம் மோசமடைவதற்கும் மேலும் ஒரு காரனய் என்றார் மீனாட்சி.

ஆகவே இந்த புகார்களை நியாயமானதா என்பதை அடையாளம் காணவும், சிக்கலைத் தீர்க்கவும் ஒரு கணக்கெடுப்பை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தளம் இறங்க வேண்டும். பூவுலகின் நண்பர்கள் நடத்திய ஆய்வின்படி மீன் தரையிறங்கும் தளத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெரிய படகுகளைக் காண முடிந்தது. ஆற்றின் குறுக்கே செல்லும் பெரிய படகுகளில் இருந்து வரும் அலைகள் ஆற்றின் கரை இடிந்து விழுவதைத் தடுக்க இயற்கை தடைகள் அல்லது வலுவான தக்க சுவர்கள் இல்லாவிட்டால் இன்னும் கடுமையான அரிப்பு ஏற்படக்கூடும் என்பது தெளிவாகிறது. கட்டுப்பாடற்ற மேம்பாட்டு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆற்றங்கரைகள் நிலையற்றதாக மாறக்கூடும். ஆற்றின் நிர்வாகத்தில் உடனடி மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், சுங்கை கெரியான் ஆற்றங்கரைகள் மேலும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் பினாங்கு அரசாங்கத்தையும், வடிகால் இலாகாவையும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக்கொள்வதாக மீனாட்சி ராமன் தெரிவித்தார்.

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

 

பத்திரிகை செய்தி. 7.3.21