நீர் மாசுபாடு துற்நாற்றத்தை கட்டுபடுத்த பன்றி பண்ணைகளுக்கு புதிய நிபந்தனை.

பத்திரிகை செய்தி 17.4.22

பினாங்கு அரசாங்கத்தின் முயற்ச்சிக்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பு

பினாங்கில் பன்றி வளர்ப்பவர்களுக்கு எதிரான புதிய நிபந்தனை களை கொண்டு வந்துள்ள பினாங்கு மாநில அரசின் நடவடிக்கையை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வரவேற்பதாக அதன் தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிகளை தங்கள் இயக்கம் முழுமையாக ஆதரிப்பதாக அவர் கூறினார்.

பன்றி வளர்ப்பு சட்டம் 2016 உடன் இணங்காத பன்றி பண்ணை நடத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில அரசாங்கம் உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்த பன்றி பண்ணைகள் நீர் மாசு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஜனவரி 2022 முதல், மாநில அரசின் செயல்பாடுககின் நிபந்தனைகளுக்கு இணங்காத பன்றி பண்ணைகள் இடித்து தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பன்றி பண்ணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் சிக்கலைத் தீர்ப்பதில் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மீனாட்சி தெரிவித்தார்.

வடிகால், ஆறுகள், கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை மாசுபடுத்துவதுடன், விதிகளை மீறி நடத்தப்படும் பன்றிப் பண்ணைகளின் நடவடிக்கைகளால் அருகில் வசிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

மாநில விவசாய, தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டாக்டர். நோர்லேலா அரிஃபின் கூறுகையில்
“பல பண்ணை நடத்துபவர்கள் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என்று கூறினார். நாம் நமது நீரையும் ஆற்றையும் ஆதாரமாக நம்பியிருக்க வேண்டுமானால், பன்றி பண்ணைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் டாக்டர். நோர்லேலா கூறியது போல நமது கடந்தகால ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பல பன்றி பண்ணை செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்பதைக் உறுதிபடுத்தப் பட்டுள்ளது என்றார் மீனாட்சி.

சில பன்றி பண்ணை நடத்துபவர்கள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தன்னிச்சையாக தற்போதுள்ள வடிகால்களில் விடுவதால், மிகவும் விரும்பத்தகாத துர்நாற்றம் வீசுகிறது.

கம்போங் செலாமாட், கெர்த்தாக் சங்குல், வால்டோர், சிம்பாங் ஆம்பாட் மற்றும் சுங்கை ஜாவி போன்ற பல முக்கிய பகுதிகளில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

கெர்த்தாக் சங்குலில் பன்றி பண்ணை செயல்பாட்டினால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நீர் மாசுபாடு மற்றும் துர்நாற்றம் காரணமாக வைரலான சமீபத்திய சம்பவம் மிக பெரியதாக பிரச்சினையாக கருதப்பட்டது.

இதன் காரணமாக இந்த பன்றி பண்ணையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பினாங்கு மாநில அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது  என்றார் மீனாட்சி.

கால்நடை மருத்துவ சேவைகள் துறை, சுற்றுச்சூழல் இலாகா, செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு மாநில நகராண்மைக் கழகம் போன்றவை இந்த புதிய விதிகளுக்கு இணங்காத பன்றி வளர்ப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக்கொள்வதாக மீனாட்சி கூறினார்.

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.
பினாங்கு