பத்திரிகை செய்தி
21.7.23
பத்துகேவ்ஸ் அருகே 20 குரங்குகளை சுட்டு கொன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது ஒரு பிராணிகள் கொலையாகும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.
———————————————————————————————————————
கடந்த வாரம் பத்துகேவ்ஸ் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சுமார் 20 குரங்குகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வர்ணித்துள்ளது.
இச்செயலை புரிந்தவர்கள் மீது காவல் துறை மிகக் கடுமையான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பி.ப. சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த காலங்களில் குரங்குகளால் பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டால், பெர்யிலித்தான் எனப்படுகின்ற வனவிலங்கியல் துறை அவற்றை கூண்டில் பழங்களை நிரப்பி, அதன் வழியாக அவற்றை பிடித்து தொலைவில் இருக்கும் பிரிதொரு காடுகளில் விட்டு விடுவதுதான் கடைபிடிக்கப்பட்டு வந்த முறை.
ஆனால் புதிதாக அவற்றை பிடிக்காமல் சுட்டுக்கொலை செய்யும் செயல் தங்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றது என்றார் சுப்பாராவ்.
குடியிருப்பாளர்கள் தாங்கள் வனவிலங்கு இலாகாவிற்கு புகார் கொடுக்கவில்லை என காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
ஆகவே யாருடைய உத்தரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை வனவிலங்கியல் இலாகா பதில் சொல்ல வேண்டும்.
மேலும் ஏன் வழக்கம் போல் குரங்குகளை கூண்டில் வைத்து பிடிக்காமல் சுட்டுகொலை செய்யப்பட்டது என்பதையும் அந்த இலாகா அறிவிக்க வேண்டும்.
மேலும் உயிரோடு பிடிக்கபட்ட சில குரங்குகளை ஒரு கூண்டிற்குள் அடைத்து விட்டு, அருகில் இருந்த படியே அவற்றையும் அதிகாரிகள் மனச்சாட்ச்சி இல்லாமல் சுட்டுக்கொலை செய்துள்ளார்கள்.
இது ஒரு கொடுரமான வன்முறை செயலாகும். பிராணிககுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு அத்துமீறல் செயலாகும்.
ஆகவே காவல்துறை இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக சுப்பாராவ் தெரிவித்தார்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்