பிஎஸ்ஆர் எனப்படுகின்ற பினாங்கு பெருந்தீவு திட்ட வழக்கின் முடிவு மீனவர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பத்திரிகைச் செய்தி  12.07.2024

மீனவர் ஜகாரியா இஸ்மாயில் தலைமையிலான 6 மீனவர்களோடு ஒன்பது விண்ணப்பதாரர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் மற்றும் பூவியல் இயக்கம் ஆகியோர் கொண்டுவந்த நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தை பினாங்கு உயர் நீதிமன்றம் நிராகரித்தை அறிந்து ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.

பினாங்கு மாநில அரசாங்கம் மாநில நகர மற்றும் கிராமச் திட்டமிடல் துறை வழங்கிய திட்ட அனுமதியை எதிர்த்து இவர்கள் முறியீடு செய்திருந்தனர். அந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பினாங்கு மாநில திட்டமிடல் குழுவின் வரைவு கட்டமைப்புத் திட்டம் 2030க்கு ஒப்புதலுக்கு முன் தேசிய இயற்பியல் திட்டமிடல் கவுன்சிலின் ஆலோசனையைப் பெறத் தவறியது மற்றும்

திட்ட அனுமதிக்கான விண்ணப்பம் பினாங்கு மாநில அரசால் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆலோசனையைப் பெறத் தவறியது போன்ற காரணங்களை முன்வைத்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இத்திட்டத்தால் பல பாதகமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீள முடியாத அழிவுகள் ஏற்படும் என்றும் மேல்முறையீட்டில் சொல்லப்பட்டது.

இன்றைய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தாங்கள் மரியாதையை தெரிவிக்கும் அதே வேளையில், தீவு சீரமைப்பு திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமாக மீனவ மக்களான விண்ணப்பதாரர்கள், தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

இது தவிர, பினாங்கின் தெற்குப் பகுதியில் உள்ள கடலோர மீனவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரமும் மோசமாகப் பாதிக்கப்படும்.இதற்கிடையில், மீனவர்களின் எதிர்காலத்தை பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் இந்த முடிவு வருந்தத்தக்கது என்று ஜெடியின் கூ சல்மா நசுஷன் கூறினார்.

இந்த முடிவை மேல்முறையீடு செய்வதா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் செயலாளர் மகேஸ்வரி கூறினார்.

மீனவர்கள் மற்றும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தெய்வ லிங்கம், ஜெசிகா ராம் பின்வானி, லலித்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மகேஸ்வரி சங்கரலிங்கம்
கௌரவ செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

கூ சல்மா நசுஷன்
தலைவர்
பூவியல் இயக்கம்