பினாங்கு குடி மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் கிடைக்க இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகை செய்தி. 8.5.22

பினாங்குவாசிகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான பினாங்கு மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கும் அதே வேளையில், இன்னும் அதிகமான மலிவு விலை வீடுகள் பினாங்கு மக்களுக்கு மாநில அரசாங்கம் கட்டித்தர வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கு மேம்பாட்டு வாரிய கழகத்தின் (பிடிசி) சூரியா 2 மலிவு விலை வீட்டுத் திட்டம் பத்து காவானில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் சூரியா 1 ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் அவ்வாரியம் அறிவித்துள்ளது.

இது பாராட்டப்படக்கூடிய ஒரு திட்டமாகும் என தெரிவித்த முகைதீன்,
பத்து காவானில் உள்ள சூரியா மலிவு விலை வீடுகள் திட்டம், பினாங்கு வாசிகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், கவர்ச்சிகரமான பகுதியாக பத்து காவான் பகுதியை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும் என்றார்.

பினாங்கின் அனைத்துப் பகுதிகளையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு நல்ல முயற்சியாக இருந்தாலும், பினாங்குவாசிகள் அதிக குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதால், மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்த சில விஷயங்களை பினாங்கு மாநில அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மேலும் பினாங்கு
தீவிலும் தொடர்ந்து மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான வழிகளைப் மாநில அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் நிலம் மற்றும் மாநில அரசு நிலம் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்காக மாநில அரசு, பிடிசி போன்ற நிருவனங்களுக்கு வழங்க வேண்டும்.

தனியார் நிருவனங்களுக்கு கொடுத்தால், மலிவு விலையில் வீடுகள் கிடைக்காது என்றார் அவர் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு, குறிப்பாக பி40 ல் உள்ளவர்களுக்கு மலிவு விலை வீடுகள் சென்றடைவதற்கு மாநில அரசாங்கம் உறுதி தர வேண்டும் எனவும் முகைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்