பினாங்கு தெற்கு மீட்பு திட்டம் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும். மீனவர்களும் பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 14.2.24

மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் .பினாங்கு தெற்கு மீட்பு திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துவிடும் என்பதால் அந்த திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக பினாங்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் குரல் கொடுத்துள்ளது. ஜகாரியா இஸ்மாயில் தலைமையிலான ஏழு மீனவர்கள் அமைப்பும், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் ஆகியோருடன் இணைந்து பினாங்கு மாநில இயக்குனரின் திட்ட அனுமதியை எதிர்த்து கடந்த 29.12.2023 அன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

ஒன்பது விண்ணப்பதாரர்களும் பினாங்கு மாநில நகர மற்றும் திட்டமிடல் இயக்குனர், பினாங்கு மாநில திட்டக்குழு, பினாங்கு மாநில அரசு, ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முதல் விண்ணப்பதாரரான ஜகாரியா இஸ்மாயில், தெற்கு மீட்பு திட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பினாங்கு தீவின் கடற்கரையோரத்தில் வாழும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மீனவ மக்களுக்காகவும் அவர் சார்பாகவும் நடவடிக்கை எடுத்தார்.

கடந்த 5.02.2024 அன்று, பினாங்கு உயர் நீதிமன்றம் விண்ணப்பதாரர்களுக்கு நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தைத் தொடர அனுமதி வழங்கியது.

நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தில், மற்றவற்றுடன், விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கோரியுள்ளனர்:

கடந்த ​​21.08.2023 அன்று பென் மலேசியா திட்ட அனுமதி வழங்கியது செல்லாது மற்றும் நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1976ன் விதிகளை மீறுவதால் எந்த பயனும் இல்லை என்ற அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

பினாங்கின் தென்மேற்கு மாவட்டத்தில் மீட்பு திட்டத்திற்கான மறுசீரமைப்பு பணிகளை தொடங்குவதற்கு பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு திட்டமிடல் அனுமதி வழங்கும் முடிவை ரத்து செய் வேண்டும் என்றும்,

மறுசீரமைப்பு பணிகள் தொடங்குவதற்கு முன் அனைத்து மீனவர்களுக்கும் அவர்களின் வருமான இழப்பு தொடர்பாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இது நீதிமன்றத்தால் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் கேட்டுக்கொள்வதாக மகேஸ்வரி தெரிவித்தார்.

மகேஸ்வரி சங்கரலிங்கம்
பொதுச் செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்