பினாங்கு நீர்ப் பேருந்துகள் பற்றி ஆழ்ந்து யோசித்தல் வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

2013-ம் வருடத்தில், ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கியே-ஷிராதாக்கி தொடர்வண்டி நிலையத்தை மூட முடிவெடுத்தது ஜப்பான் ரயில்வே. ஆனால் ஒரு சிறுமி அந்தத் தொடர்வண்டியில் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வதையும் அவள் மார்ச் 2016-ல்தான் கவ்வியை முடிப்பாள் என்றும் தெரிந்த பிறகு ஜப்பான் ரயில்வே தன்னுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டது. அந்தச் சிறுமி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து திரும்பி வருவதற்கும் ஒரு பிரத்தியேகத் தொடர் வண்டி பயண அட்டவணையை உருவாக்கியது ஜப்பான் ரயில்வே. அவள் படிப்பை முடித்த பிறகே தொடர்வண்டி நிலையம் மூடப்படும் எனவும் அறிவித்தது.

மக்கள் நலனை மையமாகக் கொண்ட பொதுச் சேவைக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு நல்ல உதாரணம். மலேசிய அரசாங்கமும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான நல்லுதாரணங்களைப் பின்பற்ற வேண்டும் என்று என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார். பாதசாரிகளைத் தவிர்த்து இதர மோட்டார் வாகனம் செலுத்துபவர்களைப் பினாங்குப் பாலத்தைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது ஆபத்தானதும், அதிக செலவினங்களை உருவாக்கக்கூடியதும் ஆகும். 107,831 மோட்டார் சைக்கிள்களும் 4,312 மிதிவண்டிகளும் 2020 மூன்றாம் காலாண்டு வரை •பெர்ரி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர் ஆஆஎன்று பினாங்குத் துறைமுக ஆணைய வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி, பாதசாரிகளும் மிதிவண்டி செலுத்துவோரும் நீர்ப்பேருந்துகளை வருகின்ற 1.1.2021-லிருந்து 30.6.2022 வரை பயன் படுத்துபவர். ஏன் இந்த நீர்ப்பேருந்துகளில் மோட்டார் சைக்கிள்களையும் ஏற்றிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தும் ஒருவர் பட்டர்வெர்த் பகுதியில் குடியிருப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் 1.7.2022 வரைக்கும் மிகவும் நீண்ட மாற்றுவழிப்பாதையை பயன்படுத்த வேண்டியிருக்கும். மோட்டார் சைக்கிளோட்டிகளை நீர்ப்பேருந்தில் பயணிக்க அனுமதிப்பதற்கு முன்பதாக சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவர்கள் நீண்ட வழிப்பாதையில் பயணித்து அதனால் சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

மோட்டார் சைக்கிளோட்டிகளை நீர்ப்பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்காவிடில் பினாங்கு பாலத்தில் வாகன நெரிசல் பிரச்னை தீவிரமாகும். இதனால் அங்கு நிகழும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். மோசமான வானிலையின்பொழுது மோட்டார்சைக்கிளோட்டிகள் எதிர்த்திசைக் காற்றினால் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

அதோடு •பெர்ரியில் சராசரி காத்திருப்புக் காலத்திற்கான அறிவிப்புகளை நிறுவ வேண்டும். இதன் மூலம் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று வாகனமோட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தெரிய வரும். அதிக நேரம் காத்திருக்க முடியாது என்று அவர்கள் முடிவு செய்யும் பட்சத்தில் மாற்று வழிகளை யோசிக்க அவகாசம் இருக்கும்.

•பெர்ரியின் எதிர்காலம் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவான தகவல்கள் கொடுக்கப் படவில்லை. பினாங்கு வாழ்மக்கள் மற்றும் பினாங்குக்கு வருகை புரிபவர்களும் இது குறித்து முறையான விபரங்கள் இல்லாமல் விடப்பட்டுள்ளனர்.

நீர்ப்பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக •பெர்ரிகள் ஏன் முறையாக இயங்குவதில் தோல்வி கண்டன என்பது குறித்து பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதா? ஹாங்காங் நட்சத்திர •பெர்ரி இன்று வரை தினமும் 70,000 பயணிகளை ஏற்றிச் செல்கிறது. முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததாலும் •பெர்ரிகள் பழுதடைந்தனவா என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேள்வி எழுப்பினார்.

 

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி 17.12.2020

Deeper thoughts should be given to Penang catamarans