புகையிலை மசோதாவில் மீண்டும் நிக்கோட்டினை சேர்த்துக்கொள்ளுங்கள். வேப் மற்றும் மின்னியல் சிகரெட் புகைப்பாளர்கள் அதிகரித்து வருகின்றனர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.

பத்திரிகை செய்தி : 24.2.24

புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாடு மசோதா 2023 அமலுக்கு வந்த நாளிலிருந்து புதிய தலைமுறையினர், இளம் புகைப்பிடிப்பாளர்கள் மற்றும் வேப் புகைப்பவர்கள் அதிகரித்து கொண்டு வருகின்றனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வேப்பில் சேர்க்கப்படும் நிக்கோட்டின் என்ற நச்சுப்பொருள் நச்சு சட்டத்தின் கீழ் அகற்றப்பட்டதால் பலர் அந்த நிக்கோட்ட்டினை பயன் படுத்தி வருகின்றனர் என அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரியும் புகைப்பதற்கு எதிரான செயலாக்கவாதியுமான என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

நவம்பர் 2023 ல் நடைமுறைக்கு வந்த இந்த புதிய சட்டம் நிக்கோட்டினை அகற்றியதால் ஆயிரக்கணக்கான புதிய புகைப்பாளர்கள் உருவாகி இருப்பதாக அவர் சொன்னார்.

நிக்கோட்டின் ஒரு நச்சு போதைப் பொருள்.முன்பு இதனை வாங்க வேண்டும் என்றால் ஒரு மருத்துவரின் அனுமதி கடிதம் வேண்டும். ஆனால் இப்பொழுது மருத்துவரின் அனுமதியின்றி இந்த நிக்கோட்டினை வாங்க முடியும்.மேலும் இந்த நிக்காட்டீன் தான் எல்லா வேப் திரவத்தில் சேர்க்கப்படுகின்றது.

இந்த நிக்கோட்டின் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரையும் சுண்டி இழுப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார். இப்போது எந்த கண்காணிப்பும் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கமும் இல்லாமல், வேப் திரவங்களை எளிதாக கடைகளில் அல்லது ஆன்லைனில் வாங்கலாம்.

பள்ளிக் குழந்தைகள் வேப் சாதனங்களை அணுக முடியும் என்றால்,இந்த மசோதா முற்றிலும் பயனற்றது மற்றும் பிரச்சனை கையை விட்டுப் போய்விட்டது என்பதைக் காட்டுகிறது.
மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து, வேப் தயாரிப்புகள் இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக இருப்பதைக் காணமுடிவதாக அவர் கூறினார்.

ஆகவே வேப் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக தயாரித்து விற்கப்படும் இவற்றிற்கு தடை விதிக்கப்பட வேண்டும். பழச்சாரு என தவறான பொருளில் விற்பனையாகும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.