பெங்காலான் ஹுலு பள்ளிவாசல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்தக் கூடாது என்பதை முதலில் அமல்படுத்திய பள்ளிவாசலாக திகழ்ந்தது.

பத்திரிகைச் செய்தி : 3/3/24

பேராக் மானிலத்திலுள்ள பெங்காலான் உலு மஸ்ஜித் ஜமேக், பேராக் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்தக் கூடாது மற்றும் நெகிழி டப்பாக்களில் உணவு மற்றும் பானங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை நடைமுறைப்படுத்திய முதல் பள்ளிவாசல் என்ற பெருமையைப் பெற்றது.

பெங்காலான் ஹுலு பள்ளிவாசல் நிர்வாக குழுவினர் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

பேராக் சுல்தான் அறிவுரை வழங்கியதை அடுத்து பள்ளிவாசள், மசூதி நிர்வாக உறுப்பினர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சமீபத்தில் பேராக் சுல்தான் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்த வேண்டாம் என்றும், நெகிழி பாட்டில்கள் மற்றும் பேக்கேஜிங்கில் உள்ள பானங்கள் மற்றும் உணவுகளை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஒத்துழைபுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்ற பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

இதர சுற்றுவட்டார பள்ளிவாசல் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட சுமார் 50 பேர் இந்த சிறப்பு விளக்கவுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியின் அபாயங்களை சுப்பாராவ் எடுத்துரைத்தார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சில நெகிழி பொருட்களான

நெகிழி கரண்டிகள்,
நெகிழி ஷாப்பிங் பைகள்,
சூடான பானங்களுக்கு செலவழிக்கக்கூடிய நெகிழி மூடிகள்,
நெகிழி தண்ணீர் பாட்டில்கள்,
நெகிழி பெட்டிகள் மற்றும் பானங்களின் கோப்பைகள்,
சிகரெட் துண்டு,
உணவு உறைகள்,
பாட்டில் மூடிகள் ஆகிய அனைத்தும் நெகிழியால் செய்யப்படுகின்றது.

இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொதுவான, அன்றாட பொருட்களாகும் என்றார் சுப்பாராவ்.

தூய்மையான வாழ்க்கை முறையை வழிநடத்த, நாம் வாங்கும் நெகிழி பேக்கேஜிங் பொருட்கள் குறித்து கவனம் செலுத்தி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருட்களை வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்பது புத்திசாலித்தனம் என்றார் அவர்.

நெகிழிகள் எளிதில் மக்குவதில்லை. அவை மெதுவாக மைக்ரோ நெகிழிகளாக மாறுகின்றன.

இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், இந்த மைக்ரோ- நெகிழி நச்சு இரசாயனங்களை வெளியிடுகிறது, அவை இறுதியில் வளிமண்டலம், தாவர வாழ்க்கை மற்றும் விலங்கு திசுக்களுக்கு மாற்றப்படுகின்றன.

நம் வீடுகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கலாம்.

ஆகவே இதுவே நடவடிக்கை எடுக்க மற்றும் மாற்றுவதற்கான நேரம்!

நெகிழியால் செய்யப்பட்ட ஷாப்பிங் பைகளை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக துணி பைகள் மஞ்சல் பை அல்லது காகித பைகளை, பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.

வேலைக்கு செல்லும்போது சொந்தமாக டீ அல்லது காபி குடுவைகளை எடுத்துச்செல்லுங்கள். சில்வர் டம்லர்களை பயன்படுத்தும் படி அவர் ஆலோசனை கூறினார்.

நெகிழி தண்ணீர் பாட்டில்களை வாங்காதீர்கள.

தூய்மையான வாழ்க்கை முறையை வாழ தனிமனிதர்களாகிய நாமும் பொறுப்பேற்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

முடிந்தவரை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதை உள்ளடக்கிய வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்