மண் அரிப்பு காரணமாக பினாங்கு பத்து ஃபெரிங்கி கடற்கரை காணாமல் போகுமா? உடனடி நடவடிக்கை தேவை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

பத்திரிகை செய்தி. 8.8.22

மண் அரிப்பு காரணமாக பினாங்கு பத்து ஃபெரிங்கி கடற்கரை காணாமல் போகுமா?
உடனடி நடவடிக்கை தேவை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
————————————————————————————————————————————–

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் மண் அரிப்பு அபாயத்தால் இங்குள்ள, பினாங்கு பத்து ஃபெரிங்கி கடற்கரை காணாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களும் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் கருதுகின்றது.

இந்த கடற்கரைக்கு வருவோர்கள் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரியும் சுற்றுச்சூழல் மூத்த அதிகாரியுமான என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.

குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் பெரிய அலைகளால் பல பாறைகள் சரிந்து விழுவதைத் தொடர்ந்து மண் அரிப்பு மோசமாகி வருகிறது என்றார் அவர்.

கரைகள் இடிந்து விழும் சம்பவங்களைத் தொடர்ந்து, மாநகர மன்ற அதிகாரிகள் அரிப்பைத் தடுக்க கல் பாறைகள் தடுப்புகளை வைத்து முயற்சி எடுத்துள்ளனர்.

ஏற்கனவே லுக்அவுட் கட்டிடம் மண் அரிப்பால் இடிந்து விழுந்தது.”இருப்பினும், சமீபத்தில் பலத்த அலைகள் காரணமாக, கடற்கரையில் சில பெரிய பாறைகள் அடித்துச் செல்லப்பட்டன என்றார் சுப்பாராவ்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடற்கரை அரிப்பு பிரச்சினை மேலும் மேலும் மோசமடையும் என்றும், இந்த கடற்கரை ஒரு நாள் காணாமல் போவது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அழகுக்குப் பெயர் போன இங்குள்ள பத்து ஃபெரிங்கியின் கடற்கரைப் பகுதி, தற்போது பாறை அரிப்பை எதிர்க்கும் வகையில் கற்பாறைகளால் நிரம்பியுள்ளது. முன்னதாக பிப்ரவரியில், கடற்கரையில் அமைந்துள்ள 10 மீட்டர் உயரமுள்ள குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) கண்காணிப்பு கோபுரம் அரிப்பு காரணமாக அதிகாலை 3.40 மணியளவில் விழுந்தது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக அரிப்பு நிலைமை மோசமாகி வருகின்றது என்றார் அவர். ஆரம்பத்தில் 20 மீட்டர் வரை ஏற்பட்ட மண் அரிப்பு தற்போது கரையோரத்தில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் வரை பரவியுள்ளது என்றார். “இடிபாடுகள் ஒருமுறை இரண்டு மீட்டர் (ஆறு அடி) உயரத்தை எட்டியதுயுள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்த நிலையில் விலக்கூடிய நிலையில் இருப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

 

கடற்கரையோரம் நடந்து செல்பவர்களுக்கு இது ஆபத்தை தரலாம். பல மரங்கள் கரையின் ஓரத்தில் உள்ளன. ஆகவே மாநகர் மன்றம் இந்த தென்னை மரங்களை உடனடியாக வெட்டிவிட வேண்டும்.

எனவே இந்த மண் அரிப்பு பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்காக இந்த சிக்கலை சமாளிக்க திறம்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று என் வி சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

என் வி சுப்பாராவ்
கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்