மருத்துவ சுற்றுலாவை பிரபலபடுத்துவதற்கு பதிலாக பொது மருத்துவ மனைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள்! பினாங்கின் பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகை செய்தி. 1.12.21

சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் ஆரோக்கியக் காப்பீட்டு பிரீமியங்கள் உயர்ந்து வருவது குறித்து பயனீட்டாளர்களிடமிருந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன.

விசாரணையில், தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் மருத்துவக் கட்டணம் அதிகரிப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய சுகாதார அமைச்சு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

பேங் நெகாராவின் 2019ன் ஆண்டு அறிக்கை படி, 2016 மற்றும் 2019 க்கு இடையில் மருத்துவ உடல்நலக் காப்பீடு விண்ணப்ப கோரிக்கைகள் ஆண்டுக்கு 11.6 சதவிகிதம் அதிகரித்துள்ளன என அறிவித்துள்ளது.

“உயர்ந்து வரும் விண்ணப்ப கோரிக்கை, பிரீமியங்களின் அதிகரிப்பை விட அதிகமாக அதிகரித்துள்ளன என்று அது கூறியது.

ஆண்டுக்கு சராசரியாக 9.5 சதவீதம். உடல்நலக் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பதற்கு தனியார் மருத்துவச் செலவும் ஒரு முக்கிய காரணமாகும்.

2019 ஆம் ஆண்டு மருத்துவப் செலவுகள் குறித்த உலகளாவிய கணக்கெடுப்பின்படி, மருத்துவச் செலவுகளின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மலேசியா மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.

மக்கள் இனி உடல்நலக் காப்பீட்டைச் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மற்றும் ஏற்கனவே உள்ள பாலிசிதாரர்களின் பாலிசிகள் காலாவதியாகவாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு தனியார் மருத்துவ
மனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில், 80 சதவீதம் பேர் பொது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையில் சரிவைக் காணும் என்பதால், பொது சுகாதார வசதிகள் அதிகமாக இருக்கும் அதே வேளையில், மக்கள் இனி அங்கு சிகிச்சை பெற முடியாது.

தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் மக்கள் தொகையில் 22% பேர் மட்டுமே தனிநபர் உடல் நலக் காப்பீட்டின் கீழ் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைகளையே சார்ந்துள்ளனர்.

ஆய்வுப்படி 81.4% குடும்பங்கள் தற்போதைய வருமானத்தை சுகாதார சேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும், 8.1% மட்டுமே காப்புறுதி நிறுவனம் திருப்பிச் செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

10.9% குடும்பங்கள் தங்கள் சுகாதார சேவைகளுக்கு பணம் செலுத்த குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பணம் கடன் வாங்க வேண்டியிருந்தது என தெரியவந்துள்ளது.

பேங்க் நெகாராவின் 2019 ஆண்டு அறிக்கைபடி “2013 முதல் 2018 வரை பகுப்பாய்வு செய்யப்பட்ட காப்பீட்டுக் கோரிக்கைத் தரவு, மருத்துவமனைப் பொருட்கள் மற்றும் சேவைகள் உரிமைகோரல் செலவுகளின் மிகப்பெரிய அங்கமாக அமைந்துள்ளன என்றும், மற்றும் மருத்துவமனை கட்டணங்களை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகளில் இது ஒன்றாகும்” என்றும் தெரிவித்துள்ளது.

ஆகவே மலேசிய சுகாதார அமைச்சு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். ஏனெனில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெருபவரின் புகார்கள் இது.

அக்டோபர் 2019 இல், மலேசியன் ஹெல்த்கேர் டிராவல் கவுன்சிலுக்கு அரசாங்கம் மவெ 25 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஒதுக்கீடு மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் காரணமாகவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைச் செலவு அதிகரித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம் என்றார் முகைதீன்.

நமது பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் வெளிநாட்டு மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க உதவக்கூடாது.

நல்ல சுகாதார சேவைகளை வழங்குவது நமது மக்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கடமையாகும். கடுமையான நோய்களைத் தடுப்பதே நீண்டகால சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்கான வழி.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை முக்கிய மூன்று தொற்றா நோய்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன – உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய்கள் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பால்- மக்கள் சிகிச்சைக்காக கிளினிக்குகள் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர்

மலேசியாவில் சுமார் 6.4 மில்லியன் பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது; 3.9 மில்லியன் பேருக்கு நீரிழிவு; மற்றும் 8 மில்லியன் அதிகரித்த மொத்த கொலஸ்ட்ரால் உள்ளது.

உடற்பயிற்சி செய்வதன் மூலம், சீரான உணவைப் பராமரித்தல், புகைபிடிப்பதை நிறுத்துதல், சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது மற்றும் மதுவைத் தவிர்ப்பதன் மூலம், தொற்றா நோய்களின் அபாயங்கள் வெகுவாகக் குறைக்கப்படலாம், இதன் மூலம் ஒரு நபர் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.

நமது சர்க்கரை பானங்கள், புகையிலை, மது, சூதாட்டம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ‘பாவ வரி’யை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், பொது மருத்துவமனைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்.

தொற்றா நோய்களின் அபாயங்களை உருவாக்குவதைத் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுமாறு பொது மக்களை பி.ப.சங்கம் கேடுக்கொள்கிறது.

இதற்கிடையில், உடல்நலக் காப்பீட்டைப் பெற நினைப்பவர்கள் இது ஒரு நீண்ட கால அர்ப்பணிப்பு என்பதை உணர வேண்டும். ஒரு உடல்நலக் காப்பீடு வைத்திருப்பவர் வழக்கமான இடைவெளியில் அவரது வயதுக்கு ஏற்ப அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும். அவர் ஓய்வு பெற்ற நேரத்தில் மற்றும் குறைந்த சேமிப்புடன் கணிசமான அளவு அதிகமாக செலுத்த வேண்டும்.

மலேசியாவில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க, மருத்துவத் தொழில், சுகாதார அமைச்சு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய உயர் அதிகாரம் கொண்ட குழுவை தோற்றுவிக்குமாறு அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்