பத்திரிகை செய்தி 21.2.22
BPA கொண்ட பாட்டில்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.
கடந்த 2011ம் ஆண்டு,மார்ச் 15ம் தேதி அன்று பிஸ்பெனால் ஏ (பிபிஏ) கொண்ட பாலிகார்பனேட் பாட்டில்களைத் தடை செய்யப் போவதாக மலேசியா அறிவித்தது. அதன் பிறகு அந்த தடை மார்ச் 2012ல் அமலுக்கு வந்தது.
இந்த பாலூட்டும் பாட்டில்களை தடை செய்யும் முடிவு குழந்தைகளின் ஹார்மோன் அமைப்புகளுக்கு இந்த இரசாயனம் ஆபத்தைக் கொண்டு வரும் என்ற காரணமாக தடை எடுக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்தது.
உணவு கட்டுப்பாடு 1985ன் பிரிவு 27ஏ ன் படி: (1) எந்தவொரு நபரும் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) கொண்ட உணவுப் பாட்டில்களை இறக்குமதி செய்யவோ, தயாரிக்கவோ அல்லது
விற்பனைக்காக விளம்பரப்படுத்தவோ அல்லது விற்கவோ கூடாது மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
“பிபிஏ பிரி அதாவது பிபிஏ இல்லாதது என்ற வார்த்தைகள் இந்த பாலூட்டும் பாட்டில்களில் அல்லது பிஸ்பெனால் ஏ (பிபிஏ) இல்லாத பாட்டில்களின் தயாரிப்புக்களில் லேபிளிடப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், அனைத்துலக மாசு ஒழிப்பு ஒருங்கினைப்பு இயக்கத்துடன் இணைந்து பி.ப.சங்கம் மேற்கொண்ட ஆய்வில், சோதனை செய்யப்பட்ட அனைத்து 9 மலேசிய பாலிகார்பனேட் பாட்டில்களின் மாதிரிகளிலும் பிபிஏ இருந்தது.
பிபிஏ என்பது பாதுகாப்பான வெளிப்பாடு நிலை இல்லாத ஒரு நச்சு இரசாயனமாகும்.
சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தை உணவு பாட்டிலில் 2.6 பிபிபி பிபிஏ இருப்பது கண்டறியப்பட்டது என முகைதீன் தெரிவித்தார்.
இந்த பாட்டில்களில் “பிபிஏ இல்லை” என்ற சொல்லும் இருந்தது.
இந்த தயாரிப்பு உணவு விதிமுறைகள் 1985 ஐ மீறியது மட்டுமல்லாமல், வர்த்தக விளக்கச் சட்டம் 1972 ஐயும் மீறி இருப்பதாக அவர் சொன்னார்.
எட்டு நாடுகளில் ஐப்பன் நடத்திய ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட 98 உணவுப் பாட்டில்கள் மற்றும் உணவுக் கொள்கலன்களில் 76 இல் பிபிஏ இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மாதிரி பாட்டில்களில் மூன்றில் இரண்டு பங்கு இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.
புற்றுநோய், கருவுறுதல் சீர்குலைவுகள் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் செயலிழப்பு மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல பாதகமான உடல்நல விளைவுகளுடன் பிபிஏ தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல தயாரிப்புகள் தங்களின் பாட்டில்களில் பிபிஏ இல்லாதவை என தவறாக பெயரிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்கி ஏமாற்றி வருகின்றனர்.
பயனீட்டாளர் வாங்கும் பொருட்களில் நச்சு இரசாயனங்கள் சேர்க்கப்படுவதற்கு கடுமையான விதிகள் தேவை. “குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளில், பாதுகாப்பான வெளிப்பாடு நிலை இல்லாத நச்சு இரசாயனமான பிபிஏ இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
மேலும், ஒரு நச்சு இரசாயனத்தை வருந்தத்தக்க வகையில் மற்றொரு நச்சு இரசாயனத்துடன்
மாற்றுவதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து பிஸ்பெனால் இரசாயனங்களும் தடை செய்யப்பட வேண்டும்,” பிபிஏ போன்ற நாளமில்லாச் சுரப்பி சீர்குலைவுகளுக்கு நம் குழந்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே உணவு விதிமுறைகள் 1985 மற்றும் வர்த்தக விளக்கச் சட்டம் 1972 ஆகியவற்றை கண்டிப்பாக அமல்படுத்துமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இதற்கிடையே பிபிஏவின் வெளிப்பாட்டைக் குறைக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு பயனீட்டாளர்களை, பி.ப சங்கம் கேட்டுக்கொள்கிறது.
குழந்தைகளுக்கு உணவளிக்க கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்துங்கள். பதனிடப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி உணவு சேமிப்பு கொள்கலன்களை பயன்படுத்துங்கள்.
உணவை சூடாக்க பிளாஸ்டிக் உறை மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம் என முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்