பத்திரிகை செய்தி 25.11.21
எச்சரிக்கை விடுக்கிறது காய்கற்களின் சங்கம். காய்கறிகளின் விலைகள் கழுத்தை அருக்குகின்றது. பயனீட்டாளர்களின் பணச் சுமை தொடர்கிறது.
தினந்தோறும் பயனீட்டாளர்ள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டியுள்ளது.
சந்தைக்கு செல்லும் குடும்பமாதர்கள் புன்னகையோடு திரும்புவதற்கு பதிலாக கண்ணீரோடுதான் வீடு திரும்புகின்றார்கள் என அச்சங்கத்தின் கல்வி ஆய்வு பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.
நாளுக்கு நாள் விலைகள் ஏறிக்கொண்டே போவது பயனீட்டாளர்கக்கு பலதரப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.
சில வீடுகளில் குடும்ப உறவனர்களிடையே மனகசப்பும் ஏற்பட்டுள்ளது.
வாங்க வேண்டிய காய்கறிகளை வாங்க முடியாமல் இல்லம் திரும்பும் குடும்ப மாதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஒவ்வொரு காய்கறியின் விலையை கேட்டால் நடுக்கம் வருகிறது என பல குடும்ப மாதர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர் என சுப்பாராவ் தெரிவித்தார்.
கொண்டு செல்கின்ற பணம் பத்தவில்லை.
இதில் எப்படி சத்துள்ள காய்கறிகளை உண்பது என குடும்ப மாதர்கள் கேளிவி எழுப்புகின்றனர்.
சந்தையிலிருந்து வீடு திரும்பும் போது கையில வாங்கினன் பையில போடல காசு போன இடம் தெரியில என பல பயனீட்டாளர்கள் வீடு திரும்பும்போதோது பாடிக் கொண்டே வருகின்றனர்.
இப்பொழுது இன்னும் 3 மாதத்திற்கு இந்த விலை ஏற்றம் தொடரும் என காய்கறிகளின் சங்கத் தலைவர் சொல்லி இருப்பது பலருக்கு மேலும் அச்சத்தை தந்துள்ளது.
அப்படி என்றால் இன்னும் 3 மாதத்திற்கு நமக்கு பிடித்த காய்கறிகளை நாம் சமைத்து சாப்பிட முடியாதா.
வரும் மழையை மட்டும் காரணம் காட்டி விலையை உயர்த்தி கொண்டே போனால் பிறகு எதற்கு விவசாய அமைச்சும் , உள்நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சும் என சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.
விலையை கடுப்படுத்தி, நியாயமான விலையில் காய்கறிகள் பயனீட்டாளர்களின் வீடுகளுக்கு சென்றுவடைவதற்கு அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும்.
விவசாயகளிடமிருந்து நேரிடையாக காய்கறிகளை வாங்கி பயனீட்டாளர் விற்பதற்கு விவசாய அமைச்சு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும் மேலும் விலை ஏற்றம் காணும் காய்கறிகளின் விலைகள் மக்களின் ஊட்டச் சத்து வழக்கத்தை மாற்றிவிடக்கூடாது. இல்லையென்றால் அது மேலும் பல புதிய மருத்துவ செலவுகளை ஏற்படுத்தி விடும் என சுப்பாராவ் எச்சரித்தார்.
ஆகவே பொதுமக்களும் முடிந்தவரையில் சொந்தமாக வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்க வேண்டும் எனவும் சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.
என் வி சுப்பாராவ்
கல்வி/ஆய்வுப் பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்