பத்திரிகை செய்தி. 9.12.21
3 ஆண்டுகளில் 55,390 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர்.
காரணங்களை கண்டறிய வேண்டும். வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு இது அழகல்ல.
கல்வி ஒரு மனிதனுக்கு உயிர் வாழ ஒரு சிறந்த ஆயுதமாகும். கல்வி இல்லையேல் இருளில் வாழ்வது போன்றதுதான். ஆனால் மலேசியாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது மிகவும் கவலைதரக்கூடிய செயல் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு உயர் அதிகாரி என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு இது தொடர்பாக மொளனம் சாதித்து வருவது மிகுந்த வருத்தத்தை தருவதாக உளளது என சுப்பாராவ் கூறினார்.
கோவிட் தொற்று தொடங்குவதற்கு முன்பதாகவே மாணவர்கள் தங்களின் பள்ளியை விட்டு விலக தொடங்கி விட்டனர்.
2018ம் ஆண்டில் 34,074 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகினர்.
ஏறக்குறைய 3000 மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் விலக தொடங்கிவிட்டனர். ஆனால் அப்பொழுதே கலவி அமைச்சு இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
காரணம் 2020ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மேலும் 11,301 மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர்.
மேலும் 2021ம் ஆண்டின் ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை 10,015 மாணவர்கள் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு பள்ளிக்கு விடை கொடுத்து வீடு திரும்பியுள்ளனர்.
அதாவது ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 1000 மாணவர்கள் பள்ளியை வெருத்து விலகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை பார்க்கும்போது, கல்வி போதனையில் மாணவர்ளுக்கு சலிப்பும் வெருப்பும் ஏற்படுள்ளது என தெளிவாக தெரிகிறது.
கற்க வேண்டிய வயதில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியைவிட்டு விலக வேண்டிய அவசியம் என்ன.
கல்வி அமைச்சு என்ன செய்து கொண்டிருந்தது. இப்பிரச்னைகளை தீர்க்க ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு மனிதனுக்கு கல்வி மிகவும் முக்கியமானது.
பள்ளியை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றால், பாடத்திட்டத்தில் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது.
அக்கறையின்மை அல்லது சலிப்பு காரணமாக மாணவர்கள் வெருப்படைந்து விலகி இருக்கலாம்.
சலிப்பு ஏற்படாத வண்ணம் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
பெற்றோரின் ஈடுபாடு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். பல மலேசிய பெற்றோர்கள் கூடுதல் வருமானத்தை பெற ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் செலவிட அவர்களுக்கு நேரமில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பள்ளிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்காதபோது, குழந்தை பள்ளியை விட்டு விலக தேர்வு செய்யலாம்.
தங்களது குழந்தைக்கு எப்படிபட்ட கல்வி வேண்டும், அல்லது குழந்தை எந்த துறையில் ஆர்வமாக இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் கண்டறிய வேண்டும்.
தங்களின் குழந்தை எதை படிக்க விரும்புகின்றானோ அந்த துறையில் அவனை சேர்ப்பது மிகச் சிறந்தது.
குழந்தை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்றால், அவருக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்.
ஒரு திறன் கல்வி. அவர்களின் தொழில் வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி பேசும்போது, என்ன கல்வி நிலை தேவை என்பதைக் கண்டறிய கற்றுக்கொடுங்கள்.
பல சமூக நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைக்கலாம். இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் தங்க வைக்கப்படும்.
கற்றலை சுவாரஸ்யமாகவும் சுவாரசியமாகவும் ஒரு கலையாக ஆக்குங்கள்.
ஒரு மாணவர் வெளியேறினால், அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுங்கள். அவரை அல்லது அவளை விவசாயம், இயந்திரவியல் நிறுவனம், விவசாய கல்லூரி முடிதிருத்தும் தொழிலாளி, சமையல்காரர் மற்றும் வேறு சில திறன் கல்வியில் சேர்த்து விடலாம் ஒரு குழந்தை என்னவாக இருக்க விரும்புகிறதோ அதை கொடுங்கள். அவர்களை வற்புறுத்தாதீர்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் அக்குழந்தையின் கைகளில் உள்ளது. பெற்றோரும் ஆசிரியரும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம்.
மேலும் பல மாணவர்கள் பள்ளியை விட்டு விலகாமல் இருக்க கல்வி அமைச்சு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
என் வி சுப்பாராவ்
உயர் கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.