ரம்லான் மாதத்தில் ஆன்மிக நிலைப்பாட்டை வலுவாக்குவோம். உணவு விரயம் மற்றும் நெகிழி கழிவுகளை தவிர்க்கவும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

இந்த புனிதமான காலத்தில் நமது பயனீட்டு பழக்க

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க உங்கள் சொந்த கொள்கலனை கொண்டு வாருங்கள்.

வழக்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்து மலேசியர்களையும் பினாங்கு பயனீட்டார்  சங்கம்  கேட்டுக்கொள்வதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

ரமலான் காலம் ஆன்மீக சிந்தனை மற்றும் சுய ஒழுக்கத்திற்கான நேரம் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு இது விருந்து மற்றும் வீண் செலவுகளின் காலமாக மாறிவிட்டது என்றார் அவர்.

உணவு கழிவு, வளர்ந்து வரும் கவலையாக மாறிவருகிறது. இப்தார் மற்றும் சஹுர் போன்றவற்றிற்கு, குறிப்பாக சந்தைகளில் மற்றும் நோன்பு திறப்பதற்காக அதிகப்படியான உணவு தயாரிப்பது, கணிசமான உணவை வீணாக்குகிறது.

2023 ஆம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின்  கூற்றுப்படி, ரமலான் போது மலேசியா 75,000 டன் உணவை வீணடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற மாதங்களுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20% அதிகமாக உணவு  வீணாவதாக அந்த கழகம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த உணவு விரயம் குறைக்கப்பட வேண்டும்.

இந்த விரயம் பாவமானது மட்டுமின்றி வளங்களை குறைத்து, சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு பங்களிக்கிறது, மேலும் சீதோஷ்ண நிலை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது என்றார் அவர்.

ஆகவே பொதுமக்கள் புத்திசாலித்தனமாக வாங்க பழக வேண்டும். அதிகமாக வாங்க வேண்டாம்.சிறிய அளவுகளில் வாங்க வேண்டும். உணவு வீணாகாமல் இருக்க தேவையான அளவு உணவை மட்டும் வாங்கவும்.எஞ்சியவற்றை முறையாக சேமித்து வைக்கலாம். வீணாவதைத் தவிர்க்க மீதமுள்ளவற்றை உறைய வைக்கலாம் அல்லது மீண்டும் பயன்படுத்தலாம்.

விற்பனையாளர்கள் உணவின் தரத்தை பராமரிக்கவும், கெட்டுப் போகாமல் இருக்கவும் சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். சந்தைகளில் மீதமுள்ள  உபரி உணவை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கும் திட்டங்களில் பங்கேற்கலாம் என்றார் முகைதீன்.

ரமலான் மாதத்தில் உணவு மற்றும் நெகிழி கழிவுகளை குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ஆகவே முஸ்லிம் அன்பர்கள் விவேகமுடன் வாங்க முயற்சிக்க வேண்டும்.

புத்ராஜெயாவில் உள்ள ரம்ஜான் பஜார் விற்பனையாளர்கள் பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் உணவைத் தயாரித்து விற்க வேண்டும் என்று புத்ராஜெயா கார்ப்பரேஷன்  சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை பி.ப.சங்கம் முழுமையாக வரவேற்கிறது என்றார் முகைதீன்.

இந்த முன் முயற்சி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், கெட்டுப்போவதைக் குறைப்பதையும் மற்றும் சாத்தியமான உணவு நச்சுத்தன்மையைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உணவு சுகாதாரத்தை பராமரிக்கவும், தேவையற்ற உணவு வீணாக்கப்படுவதை தடுக்கவும் மலேசியா முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நெகிழி பேக்கேஜிங் மற்றும் கொள்கலன்கள் தவிர்க்கப்பட வேண்டும். நெகிழி  கழிவுகள் ரமலான் காலத்தில் அதிகரிப்பதால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு தடை வேண்டும். கழிவு மேலாண்மை நிறுவனத்தின் கூற்றுபடி ரமலான் மாதத்தில் திடக்கழிவு சேகரிப்பு கணிசமாக அதிகரிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் மட்டும், இந்நிறுவனம் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பகாங்கில் வெறும் 20 நாட்களில் 54,000 மெட்ரிக் டன் கழிவுகளை சேகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட 4,000 மெட்ரிக் டன்கள் அதிக மாகும்.  இந்த கழிவுகளில் பெரும்பகுதி ரம்லான் சந்தையிலிருந்து சேகரிக்கப்பட்ட உண்ணப்படாத உணவு மற்றும் நெகிழி பேக்கேஜிங் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கோலாலம்பூரில் ரம்லான் போது சேகரிக்கப்படும் தினசரி கழிவுகள் 2,500 முதல் 2,800 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பேக்கேஜிங் மற்றும் பாலிஸ்டிரீன் கொள்கலன்கள் இந்த ஆபத்தான அதிகரிப்புக்கு முக்கிய பங்களிப்பாளர்களாகும்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க,  அனைவரும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். புதிய பொருட்களைப் பயன்படுத்தி வீட்டில் உணவைத் தயாரிக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஆர்டர் செய்து வீட்டுக்கு கொண்டுவந்து வினியோகம் செய்யும் முறையில் தரப்படும் பேக்கேஜிங்கிலிருந்து நெகிழி கழிவுகளைக் குறைக்க இது உதவுகிறது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களைப் நாம் பயன்படுத்தலாம்.. சந்தையில் உணவுகளை  வாங்கும் போது உங்கள் சொந்த உணவு மற்றும் பானக் கொள்கலன்களைக் கொண்டுச் செல்ல வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி கழிவுகளைக் குறைப்பதை ஊக்குவிக்க வேண்டும். தங்கள் சொந்த கொள்கலன்களைக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு விலை தள்ளுபடியை வழங்க விற்பனையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். நன்றியுணர்வு, சுய ஒழுக்கம் மற்றும் கவனிப்பு ஆகியவற்றின் மதிப்புகளை மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலுக்கும் விரிவுபடுத்துவோம்.

உணவு மற்றும் நெகிழி கழிவுகளை குறைப்பது என்பது நிலைத்தன்மைக்கான செயல் மட்டுமல்ல, பூமியின் பணிப்பெண்களாக இருப்பதற்கான நமது உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

இந்த ரம்லான் மாதம் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க தனிநபர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அழைக்கிறது. ஒன்றாக, எதிர்கால சந்ததியினருக்காக கிரகத்தை பாதுகாக்கும் அதே வேளையில் புனித மாதத்தின் உண்மைக்கு மதிப்பளிக்கும் தினமாக இதை மேற்கொள்வோம் என்றார் முகைதீன் அப்துல் காதர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

[1] Unsold, leftover food at Ramadan bazaars in Malaysia raises concerns over wastage. (2023). CNA. https://www.channelnewsasia.com/asia/unsold-leftover-excess-food-malaysia-ramadan-bazaars-wastage-impact-environment-volunteer-needy

[2] Mail, M. (2025). After 3pm or else: Putrajaya Ramadan bazaar traders face strict deadline, warns PPj. https://www.malaymail.com/news/malaysia/2025/02/16/only-after-the-clock-strikes-three-putrajaya-ramadan-bazaar-traders-given-strict-deadline-comply-or-face-action-says-ppj/

[3] KL, Putrajaya and Pahang see an increase of 4,000 metric tonnes in solid waste collection during Ramadan. (2024). https://twentytwo13.my/kl-putrajaya-and-pahang-see-an-increase-of-4000-metric-tonnes-in-solid-waste-collection-during-ramadan/