பத்திரிகைச் செய்தி : 06.03.2025
பினாங்கு தீவில் தங்களது கார்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணத்தை பினாங்கு மாநகர் மன்றம் அண்மையில் உயர்த்தி இருந்தது. இந்த கட்டண உயர்வை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுமையாக ஆதரிப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

மேலும் மேம்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து திறமையாக இருக்க வேண்டும் என்றார் அவர். பினாங்கு தீவின் மாநகர் நகர சபையின் முயற்சி பாராட்டுக்குரியயது. மாநகர் மன்றம் கார் நிறுத்தும் கட்டணத்தை 50% அதிகரித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் நெரிசலைக் கருத்தில் கொண்டு சில சாலைகளில் வாகன நிறுத்தும் நேர வரம்பையும் விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்வதற்கான சரியான திசையில் ஒரு படியாகும். இது கார் நிறுத்தும் இடங்களின் சிறந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கும். சில வாகன நிறுத்தும் இடங்களில், பொருப்பற்ற சிலர் பெரிய பீப்பாய்கள், நெகிழி நாற்காலிகள், பூந்தொட்டிகள் அல்லது பிற பொருட்களை வைத்து விடுகின்றார்கள். இதன் காரணமாக வாகன நிறுத்துமிடங்களுக்கு இடையூறாக இருக்கின்றது.
மேலும், நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் பினாங்கு சாலைகளில் ஏற்கனவே நிலவும் நெரிசல் பிரச்சினைகளை அதிகப்படுத்தி, பயணிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றார் முகைதீன்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கப்பட சேண்டும். மேலும் நம்பகமான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து அமைப்பு இல்லாமல், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நீடிக்கும்.
பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் தனியார் கார்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இது வசதியாகவும், மலிவு விலையிலும், நன்கு இணைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாமல் தூய்மையான மற்றும் பசுமையான பினாங்கு மானிலத்திற்கு பங்களிக்கும் என்றார் முகைதீன் அப்துல் காதர்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்