செயற்கை விவசாயத்தை பின்பற்றாமல் பாரம்பரிய விவசாய முறைக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
அவ்வகையில், இயற்கை விவசாயத்திற்கு தமது தரப்பு தீவிர முனைப்பு காட்டி வருவதாக அச்சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவு அதிகாரி என்,வி சுப்பாராவ் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் இயற்கையான முறையில் கிடைத்த காய்கறிகள் அனைத்தும், தற்போது அதிகமான செயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரடப்பட்டு வருகின்றன.
பரபரப்பான சூழலில் மக்களும் இவ்வாறு பயிரிடப்படும் காய்கறிகளை பயன்படுத்துகின்றனர்.
மக்கள் ஆரோக்கியமான உணவை பெற பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒவ்வோரு மாதமும் இயற்கை விவசாயம் குறித்த வகுப்புகளை நடத்தி வருவதாகவும் இதில் விவசாயம் செய்வதற்கான அணுகுமுறைகளும் வழிமுறைகளும் கற்பிக்கப்படுவதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.
வீட்டிற்கு அருகாமையில் இட வசதி உள்ளவர்கள், பூச்சிக்கொல்லி மருந்து, செயற்கை உரம் போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாய வழிமுறைகளை பின்பற்றி விவசாயம் செய்தால் ஆரோக்கியமான உணவுகளை நாம் எளிமையாக பெறலாம் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
மக்களின் ஆரோக்கியத்தை கருதி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்தும் இந்த பயிற்சி வகுப்பில் இந்தியர்கள் கலந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
–
பெர்னாமா