விவசாய கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். அழைப்பு விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

விவசாய கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் மாண்வர்கள் ஒத்துழைத்தால் காய்கறிகளின்
விலைகள் குறையும். அனைவரும் பயிர் செய்ய வேண்டும்.
அழைப்பு விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

தினம் தினம் காய்கறிகளின் மாற்றம் ஏற்பட்டு வரும் அக்காலக்கட்டத்தில், ஒவ்வொரு  வரும் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை நட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நிலம் உள்ளவர்கள் தாமதிக்காது தங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நடவு செய்ய வேண்டும்.
இல்லையெப்றால் நாம் எடுக்கின்ற சம்பலம் காய்கறிகள் வாங்குவதற்கே முடிவடைந்துவிடும் என அச்சங்கத்தின் கல்வி மற்றும் இயற்கை விவசாய பயிற்றுனர் என் வி சுப்பாராவ் கூறினார்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இந்த தோட்டக் கல்வியை சொல்லித் தரப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

அதோடு பள்ளிகளில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலி நிலங்களில், இயற்கை விவசாய தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் சிபாரிசு செய்தார்.

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய முறைகளை சொல்லிக் கொடுத்தால் எதிர் காலத்தில் இம்மாணவர்கள் மிகச் சிறந்த விவசாயிகளாக திகழ்வார்கள் என்றார் சுப்பாராவ்.கேரிதீவு கிழக்கு தமிழ் பள்ளியில் நடை பெற்ற இயற்கை விவசாய பயிற்சி பட்டறையில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பள்ளிகளில் இவர்களுக்கு விவசாய கல்வியை கற்றுத்தந்தால், பிற்காலத்தில் இது அவர்களின் குடும்ப பொருளாதார சுமையை குறைக்கும் என்றார்.

பலருக்கு எப்படி விதை நடுவது, பயிற்களை எப்படி பாதுகாப்பது, பூச்சிகளை எவ்வாறு கையாளுவது போன்ற நுட்பங்களை அறியாது உள்ளனர்.
தங்கள் பயிர்களில், பூச்சிகள் இருந்தால், அதனை பூச்சிக்கொல்லி மூலமாக தெளித்து சாகடிக்கின்றனர். ஆனால் நாங்கள் பூச்சிவிரட்டியை பயன்படுத்துங்கள் என பிரச்சாரம் செய்வதோடு அதனை எவ்வாறு செய்வது என்பதையும் சொல்லித் தருகின்றோம் என்றார் சுப்பாராவ்.

பயிர் ஊக்கிகள், மூடாக்கு முறை,மண் புழு உரம் தயாரித்தல், பூச்சி விரட்டி, பசுச்சாணம் பயன் படுத்தும் முறை ஆகிவற்றை பற்றி சுப்பாராவ் இப்பளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது எடுத்துரைத்தார்.

பிறகு மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பள்ளியில் இருந்த நிலத்தில் பலத்தரப்பட்ட காய்கறி விதிகளை நடவு செய்தனர்.

கோலா லங்காட் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்ககும் சுமார் 90 மாணவர்களும் இக்கேரிதீவு கிழக்கு தமிழ் பள்ளியில், பி.ப.சங்கம் கொண்டுவந்த விதைகளை நட்டதோடு, தங்களது பள்ளிக்கும் சில விதைகளை கொண்டு சென்றனர்.

கலந்து கொண்ட ஆசிரியர்களும் விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு செடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு முனியாண்டி அவர்கள் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். சிலாங்கூர் மாநில தமிழ் பள்ளிகளின் தமிழாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் கணேசன் அவர்களும் கலந்து சிறப்பு செய்தார்.

3 மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்வை பி.ப.சங்கத்தின் சுப்பாராவ் வழி நடத்திச் சென்றார்.