வேண்டாம் கூடுதல் கூடாரங்கள் கோவிட் 19 உடன் விளையாட வேண்டாம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள்.


உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், மலேசியாவிலும் அதன் பதிப்புக்களும் மரண எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதால், தீபாவளிக்கான சந்தைகள் நிருத்தப்பட வேண்டும் எனவும் வர்த்தகர்கள் தங்களின் கடைகளுக்கு முன்னால் கூடுதல் கூடாரம் கேட்டு போர் நடத்த வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்திய வர்த்தகர்களுக்கு மீண்டும் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றது.

கோவிட் 19 காரணமாக நாட்டில் உள்ள அனைத்து வியாபாரமும் கடுமையாக பாதித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என பி.ப.சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

இவர்களின் இழப்பீடு கணக்கிட முடியாது.சிறு வர்த்தகர்களின் வியாபாரம் 40% குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்திலும் வேலை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார். ஆக கையில் பணம் இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் வீடு மற்றும் கார் கடனை அடைக்க முடியாமல் தத்தளிப்போரின் எண்ணிக்கை கூடி வருவது பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வரும் புகார்களே ஒரு உதாரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆக எல்லா துறையில் உள்ள அனைவரும் இந்த கோவிட் 19 மூலமே பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள், பயனீட்டாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பணப்பிரச்சனையில் சிக்கி தவிக்கின்றனர்.

இதற்கிடையே, கோவிட் 19ன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என சுப்பாராவ் கோடி காட்டினார்.

இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தூர இடைவெளி, முக கவசம் அணிய மறுப்பது ஒன்று கூடல், அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டாலும்  அதனை மீறி செல்வது, உணவு கடைகளில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற காரணத்தால் கோவிட் 19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண வைபவங்கள், காது குத்துதல், பிறந்த நாள் விழா போன்ற விழாக்களை நடத்துவது தவறு. அல்லது 20 க்கும், குறைவானவர்களே கலந்துகொள்ள ஆவன செய்ய வேண்டும்.

தீபாவளி சந்தைகளை நடத்தும்போது  நிச்சியமாக அதிகமானோர் வருவார்கள். பொருள் வாங்க வரும் பயனீட்டாளர்கள் எந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள் என்பதும் தெரியாது. யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும்.

மியன்மார், லாவோஸ், கம்போடியா, புருனை, வியட்னாம் போன்ற நாடுகளில், குறைந்த அளவிலேயே கோவிட் 19 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு அரசாங்கத்தின் கட்டளைகளை அங்குள்ள மக்கள் செவிமெடுத்து கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இந்தியா நாட்டு மக்களின் அலட்சியத்தால் கோவிட்19 கோர தாண்டவம் ஆடுகிறது.

ஆகவே அது போன்ற சம்பவங்கள் நமது நாட்டிலும் நடைபெறாமல் இருக்க நாம் சிறிது தியாகம் செய்ய வேண்டும்.

மனிதன் பிற மனிதனாக கொடுத்த ஒரு பரிசு இது. நாம் தான் இதற்கு சரியான மருந்து.

ஆகவே சிறு வணிகர்கள் இந்த சவால்களை எதிர்நோக்கியாக வேண்டும். இவற்றை சமாளிக்க வேண்டும். தங்களின் வியாபாரத்தை புதிய கோணத்தில் கொண்டு செல்ல இவர்களுக்கு இவர்களின் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் நடைமுறைகளை அலட்சியம் செய்யாமல், அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், நிச்சியம் கோவிட் 19 யை கட்டுப்படுத்த முடியும் என சுப்பாராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

என் வி. சுப்பாராவ்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

Nv Subbarow