எங்களை பற்றி
எங்களைப் பற்றி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (பி.பசங்கம்), மலேசியாவில் இயங்கும், ஒரு இலாப நோக்கம் கருதாத, சமூகத்தின் அடிமட்ட மக்களின் நலனுக்காக, பயனீட்டாளர்களின் உரிமைகளுக்காக, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு சமூக இயக்கமாகும். இது 1969ல் தோற்றுவிக்கப்பட்டது. பினாங்கிலிருந்து இயங்கும் இதன் அலுவலகம் கல்வி, ஆய்வு-ஆராய்ச்சி, இயற்கை வேளாண்மை, பயிற்சி, புத்தக பதிப்பு, மக்களை ஒருங்கிணைத்து இயங்க வைக்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கக் காலத்தில் பொருட்களின் விலையேற்றம், அதன் தரம், சேவை போன்ற அடிப்படை விஷயங்களுக்குக் குரல் கொடுத்த வந்த பி.ப. சங்கம், கால ஓட்டத்தில் மனித உரிமை, சமூக நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் நோக்கு அதன் செயல்முறை திட்டங்கள் போன்ற சவால்மிக்க விஷயங்களை முன்னின்று எடுத்து போராட துவங்கியது. பயனீட்டாளர்கள் பொறுப்புணர்வுமிக்கர்களாக மாறுவதற்கும், சந்தை மோசடி மற்றும் ஏமாற்றுகளிலிருந்து பயனீட்டாளர்களை பாதுகாப்பதற்கும், உற்பத்தி, உணவு, மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஏற்படும் ஆபத்துக்கள், நெறியற்ற வணிக நடவடிக்கைகள் போன்றவற்றை அம்பலப்படுத்தும் பணிகளுக்காக பி.ப.சங்கம் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறது.