CAP receives Ibn Khaldun Merit Award from International Islamic University Malaysia

CAP President SM Mohd Idris receives the award from the Minister of Education YAB Dr Maszlee Malik. On the right is Tan Sri Prof Emeritus Dzulkifli Abdul Razak, Rector of IIUM.

27 நவம்பர் 2018
கடந்த 10 நவம்பர் 2018-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு உலக சமூகநிலை மாற்றத்திற்கான இப்னு கால்டுன் விருதினை கல்வி அமைச்சர் மாண்புமிகு முனைவர் மஸ்லி மாலிக் வழங்கினார். இவர் அனைத்துலக மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவருமாவார்.
பயனீட்டாளர்களின் உரிமைகள், சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட உறுப்பினர்களின் நலன்களைப் பேணுவதிலும், ஏறக்குறைய 50 ஆண்டுகளாக நிலைபேறான வளர்ச்சியைக் கொண்டு வருவதிலும் மலேசியர்களுக்கு அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபோன்ற விருது ஒரு அமைப்பிற்கு வழங்கப்படுவது இதுவே முதன் முறை என்று அனைத்துலக  மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முகவர் பேராசிரியர் டான் ஸ்ரீ
சுல்கிப்லி அப்துல் ரசாக் கூறினார்.   இந்த விருதினை பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் அவர்கள், அனைத்துலக  மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் பெற்றுக்கொண்டார்.
விருதுக்கான தகுதியுரைகளைக் கீழே கொடுத்துள்ளோம்.
அனைத்துலக சமூக மாற்றத்திற்கான இப்னு கால்டுன் தகுதி விருது
இப்னு கால்டுன் அவர்களின், உலகளாவிய அந்தஸ்து மற்றும் ஒற்றுமை, கலாச்சாரம், சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவு பற்றிய அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அனைத்துலக மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் (IIUM) இப்னு கால்டுன் தகுதி விருதை அறிமுகப்படுத்தியது. இந்த விருது, சமூகத்தில் உள்ள நிறுவனங்களின் மதிப்பை முன்னிலைப்படுத்தவும், சமூக சேவைகளை வழங்குவதில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குச் முன்மாதிரியாக இருந்து அதன் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்குப் பாடுபடுவர்களை, நேரடியாக அல்லது மறைமுகமாக சமூக சேவைகளை செய்பவர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.
இப்னு கால்டுன் தகுதி விருது பெறுநர் 2018

2018-ம் ஆண்டுக்கான இப்னு கால்டுன் தகுதி விருதினைப் பெறுபவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகும்.  பயனீட்டாளர் உரிமைகள், சமூகத்தில் அடிநிலையில் உள்ள, ஓரங்கட்டப்பட்ட மக்களின் நலன்கள் மற்றும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் பி.ப.சங்கத்தின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இப்னு கால்டுன் தகுதி விருதினைப் பெறுவதற்குப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பு, ஆதரித்து வாதாடுதல், பிரச்சாரங்கள், கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி, ஆகியவற்றோடு, பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளுடனான ஒத்துழைப்பு மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முயற்சிகள் மலேசிய சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாகவும், உலகளவிலும் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வந்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் எல்லைகள் விரிவடைந்துள்ளன. பயனீட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை உயர்த்துவதை விடவும் அல்லது அழுத்தம் கொடுக்கும் குழுக்களாக செயல்படுவதை விடவும் இப்போது அவர்கள் பரவலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளில் இப்போது சுற்றுச்சூழல் கண்காணிப்பும் அடங்கும். சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்,  எதிர்ப்புப் பிரச்சாரங்களை செயல்படுத்துதல், பிற நிறுவனங்களுடன் இணைந்து வழக்காடு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பயனீட்டாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பையும் மேம்படுத்தி வருகின்றனர்.
பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளின் நடைமுறை நிர்வாகத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஈடுபாடு, சமூகம் அல்லது தனிநபர் நடவடிக்கை மற்றும் அரசாங்க மற்றும் கூட்டு நிறுவனங்களிடையே கூடுதல் பொறுப்புகளுக்கான பிரச்சாரத்தையும் ஊக்குவித்திருக்கிறது.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துவக்க வரலாறு மற்றும் அதன் பங்களிப்புகள்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் துவங்கப்பட்ட 1970-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அது எல்லாத் தரப்பு மலேசியர்களின் உரிமை மற்றும் நலன்களுக்காகப், குறிப்பாகப் பின்தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காகப் போராடி வருகிறது.  தனிநபர், சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் எதிர்நோக்கும் எண்ணிலடங்காப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் பொறுப்பினை அது ஏற்றுக்கொண்டுள்ளது.
 “எளிய மக்களுக்கு குரல் கொடுத்தல்” என்ற அதன் குறிக்கோள் இலாப நோக்கற்ற இந்த அமைப்புக்கு மிகவும் பொருத்தமானது.  அதன் நோக்கம் பயனீட்டாளர்களுக்கான உணவு, உறைவிடம், ஆரோக்கியம், சுகாதார வசதிகள், பொதுப்போக்குவரத்து, கல்வி, சுத்தமான சூழல் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.  இதுபோன்ற விழிப்புணர்வுகள் வெகு குறைவாக இருக்கும் காலக்கட்டத்திலேயே பி.ப.சங்கம் அவ்வாறு செய்யத் துவங்கிவிட்டது.
ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவும் உரிய தகவல்களை அளிப்பதற்காகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெவ்வேறு தளங்களில் ஆய்வுளை மேற்கொண்டு, அதன் மூலம் சட்டதிட்டங்களை வகுப்பவர்கள் முறையான சட்டதிட்டங்களைக் கொண்டு வருவதற்கு துணை புரிகிறது.  இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 3,000-லிருந்து 4,000 புகார்களை கையாண்டு வருகிறது.  தரம் குறைந்த பயனீட்டு உற்பத்திகள், உணவுகளில் கலப்படம், தரமற்ற சேவைகள் மற்றும் வீடுகள் ஆகியவை இதில் அடங்கும்.  அது துவங்கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 100,000 புகார்களையும் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளது.  மிகவும் குறைவான நிதியின் மூலமாகவே இயங்கி வரும் ஒரு அமைப்புக்கு இது ஒரு சாதாரண சாதனை கிடையாது.  பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட இணை உறுப்பினர்கள் உள்ளனர். அதன் இணை உறுப்பினரான பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கிய நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது.
மலேசியப் பயனீட்டாளர்களின் நலன் காக்கப் புறப்பட்டிருக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பயனீட்டாளர் பாதுகாப்பு தொடர்பான ஒரு விழிப்புணர்வை உருவாக்கி விட்டிருக்கிறது.  அனைத்துலக பயனீட்டாளர் பாதுகாப்பு தரத்திற்கு இணையாக அது செயல்பட்டு வருகிறது.    
உலகமயமாக்கப்பட்ட மற்றும் இலக்க மயமாக்கப்பட்ட மாற்றங்களை உலக அளவில் பேசுவதில், பயனீட்டாளரின் குரல் அவர்கள் தொடர்பு கொள்ளும் அரசுகள் மற்றும் நிறுவனங்களைப் போலவே ஆற்றல் பெற்றதாக இருப்பதை நிர்ணயம் செய்வதில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உறுதியாக உள்ளது. தொடர்ச்சியான உலகமயமாக்கல் மற்றும் இலக்க உலகில் எல்லோருமே பயனடைவதை இது உறுதி செய்யும்.  நிறுவனங்கள் உலகளாவிய நிலையில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பயனீட்டாளர்களை ஆழமாகச் சிந்திக்கும்படியும், பயனீட்டாளர் பாதுகாப்பு கைவிடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தது.
அதன் துடிப்பான 35 ஊழியர்களோடு இணைந்து 92 வயதான பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையையும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதையும் செவ்வன செய்து வருகிறார்.   பி.ப.சங்கம் அதன் இணை நிறுவனங்களான பூவுலகின் நண்பர்கள் மற்றும் மூன்றாம் உலக ஒருங்கிணைப்பு ஆகியவை துடிப்பான, ஆற்றல் மிக்க, நியாயமான சமூகத்தை உருவாக்கும் பொருட்டு செயலாற்றுகிறது.  மலேசிய சமுதாயத்தின் மாறுபட்ட மரபுகள், மதிப்புகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளில் வேரூன்றிய கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்கப் பாடுபடுகிறது.
இந்த அடித்தளத்தை உருவாக்கி, பி.ப.சங்கம் பயனீட்டாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான போராட்டத்தின் மூலம் அரிய பங்களிப்புகளைச் செய்து, மலேசிய வரலாற்றில் முன்னோடியாக இருந்து வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பினாங்கு பயனீட்டாளர் சங்க இதழ் ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீன மொழியில் வெளியிடப்படுகிறது.  மலேசியாவில் உள்ள எல்லா பி.ப.சங்க உறுப்பினர்களுக்கும் ஆய்வு மற்றும் ஆதாரங்கள் மூலமாக அரிய தகவல்கள் சென்று சேருவதற்கு பி.ப.சங்கம் உதவுகிறது. பி.ப.சங்கத்தின் சில சாதிப்புகள் வருமாறு:-
•    அது துவங்கிய காலத்திலிருந்து, பயனீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் அவர்களுடைய உரிமைகளை அதிகரித்து சரியான பொருள் மற்றும் உற்பத்திகளை தேர்வு செய்து வாங்க வழிகாட்டியுள்ளது.
•    1975-லிருந்து , குவாலா ஜூரு அருகில் சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்பு மற்றும் தூய்மைக்கேட்டினால் பாதிக்கப்பட்ட  மீனவ சமூகத்திற்கு உதவி வருகிறது.
•    1982-ல், சுற்றுச்சூழல் தரம் கெட்டுப்போயிருப்பதை பி.ப.சங்கம் தொடர்ச்சியாக வெட்டவெளிச்சத்திற்குக் கொண்டு வந்த காரணத்தால், சுற்றுச்சூழல் தூய்மைகேட்டை நிர்வகிக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் அமைச்சு தொடங்கப்பட்டது.  
•    நாட்டில் உள்ள தொழிலாளர்களின் சமூக நலன் மற்றும் தொழில் சூழல்களை மேம்படுத்த உதவியுள்ளது.  
•    1980-லிருந்து, சந்தையில் இருக்கும் ஆபத்தான 20 விதமான மருந்துகளின பட்டியலை அம்பலப்படுத்தியது. பிறகு இந்த மருந்துகள் சுகாதார அமைச்சால் தடை செய்யப்பட்டன.   
•    1990-களில் மற்ற அமைப்புகளோடு இணைந்து பினாங்கு மலையைக் காப்பாற்றுங்கள் பிரச்சாரத்தில் இறங்கியது.  இதன் மூலம் பினாங்கு மலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக சீரழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு அதன் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.
•    1994-ல் பினாங்கு கடற்கரை மீனவர்களின் வலையமைப்பை (PIFWA) உருவாக்கி, அவர்களின் சமூக நலன் மற்றும் தொழில்நலனைப் பாதுகாத்து வந்தது.
•    மலேசியாவின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் பயனீட்டாளர் கழகங்களை நிறுவி, பயனீட்டாளர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இள வயதிலேயே மாணவர்களைச் சென்றடையும்படி செய்தது.  
•    பயனீட்டாளர், வீடு வாங்குபவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கத்தை வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டது.  நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே வாடகைக்கு இருப்பவரை  வீட்டு உரிமையாளர் வெளியேற்றுவதிலிருந்து அவரைப் பாதுகாக்கும் பொருட்டு  குறிப்பு நிவாரணச் சட்டம் 1992 திருத்தி அமைக்கப்பட்டது.
•    உணவு மற்றும் பொருள் பாதுகாப்பு, மருந்து விலைகள் மற்றும் புகைபிடிப்பது போன்ற சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளில் தொடர் விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
•    மலைகளில் நிகழும் பாரபட்சமற்ற மேம்பாடுகள் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், சொத்து மற்றும் அவர்களின் உயிரைப் பாதிக்கும் வேளையில் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவுகளை வழங்கிப் போராடி வருகிறது.
•    உள்நாட்டு பல்கலைக்கழகங்களை அந்நியத்துவப் பாதிப்பிலிருந்து விடுவிக்க அது சம்பந்தப்பட்ட மாநாடுகளை ஏற்பாடு செய்தது.  இதன் மூலம் சமுதாயத்தோடு ஓர் தொடர்புமுறையில் உள்ள ஒரு ஒரு கல்வித்திட்டத்தை கொண்டு வரக்கூடிய பல்கலைகழகத்தை உருவாக்க முனைந்தது.  இதற்குக் கல்வியுலகில் “Quadruple Helix” என்று பெயர்.  
•    பஹாங், கேபேங்கில் இயங்கி வரும் லீனாஸ் தொழிற்சாலையை மூடி அங்கு மக்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எல்லாக் கழிவுகளையும் அகற்றுமாறு அதற்கான ஆதாரங்களைத் திரட்டி, எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம், அறிவியல், சீதோஷ்ண மாறுதல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் (MESTECC)  பார்வைக்கு பூவுலகின் நண்பர்கள் கொண்டு சென்றது.

மனிதர்கள் எதிர்நோக்கும் கடுமையான சவால்களுக்கு நடைமுறை சாத்தியமான மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை முன் வைத்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு “முறையான வாழ்வாதார விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த விருது 1980-ல் ஜெர்மன்-சுவீடன் கொடையாளி ஜேக்கப் வோன் ஈஸ்க்கூல் அவர்களால் (Jakob von Uexkull) துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமை, நிலைபேறான மேம்பாடு, ஆரோக்கியம், கல்வி மற்றும் அமைதி ஆகியவற்றுக்குப் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.  2014-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்களின் சமுதாய சேவையை நினைவு கூர்ந்து அவருக்கு துன் அப்துல் ரசாக் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமுதாயத்தின் மீது பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு உள்ள பொறுப்பு
பயனீட்டாளர் பாதுகாப்பு தொடர்பாகப் பல வெற்றிகளைத் தொட்டிருந்தாலும், பி.ப.சங்கம் தொடர்ச்சியாக பயனீட்டாளர்களின் விழிப்புணர்வு, உரிமை, அவர்கள் புகார்களைத் தீர்த்து வைத்தல், சுற்றுசூழல் உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.  பயனீட்டாளர்களின் உரிமை மீறப்படும் பட்சத்தில் அதற்கான சரியான சட்ட நடவடிக்கை, சுற்றுச்சூழல் தூய்மைகேடு, காடுகள் அழிப்பு, மலைச்சரிவுகளில் மேம்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு உதவுதல், இரசாயனங்களற்ற, இயற்கையான காய்கறிகளை வளர்க்க குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றையும் பி.ப.சங்கம் மேற்கொண்டு வருகிறது.  பினாங்கு மலை மற்றும் கடற்கரை, நீர் மூலங்கள் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளது.  அதே நேரத்தில் பாரம்பரியத்தைத் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு, ஆரோக்கிய சேவைகள், குறைவான விலையில் மருந்து மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பி.ப.சங்கம் உறுதி செய்து வருகிறது.  பணவீக்கம் மற்றும் நேர்மையற்ற வணிக நடவடிக்கையினால் ஏற்படும் பொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்காணிப்பதிலும் தன்னுடைய பங்கை விரிவுபடுத்தியுள்ளது.  தொழிலாளர் சங்கங்கள், விவசாயிகள், மீனவர்கள், சமூகக் குடியிருப்பு சங்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்பொழுது அவர்களுக்கு உதவி வருகிறது.  வேறு சமூக இயக்கங்களோடு இணக்கான உறவில் இருந்து அதன் மூலம் பினாங்கு கட்டமைப்புத் திட்டம், முதன்மைப் போக்குவரத்து திட்டம், கடல் மீட்புத் திட்டங்கள், உள்ளூர் திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமும், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொது நலன் மற்றும் அது சம்பந்தமான வழக்காடல்களை ஊக்குவித்து வருகிறது.

பயனீட்டாளர் உரிமை மற்றும் நிலைபேறான மேம்பாட்டு குறிக்கோள் (2016-2030) ஆகியவை சம்பந்தமான நடவடிக்கைகளோடு சேர்த்துப் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் உள்ள மலேசியர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பொறுப்பேற்றுள்ளது.  அது தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்கால சமுதாயத்தினரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கருத்துருவங்களை வடிவமைத்து நிறைவேற்றுவதற்கு அது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
CAP receives Ibn Khaldun Merit Award from International Islamic University Malaysia

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அனைத்துலக மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்திடமிருந்து இப்னு கால்டுன் தகுதி விருதைப் பெறுகிறது