Objectives Tamil

குறிக்கோள்

1) பயனீட்டாளர் கல்வி புகட்டுதல், பயனீட்டாளர்களின் அடிப்படை தேவை, உரிமைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை எடுத்தரைத்தல்

2) தனிநபர் பயனீட்டாளர் உரிமை குறித்து ஆலோசனை வழங்கி அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

3) பொருட்களின் நியாய விலை, அதன் தரம், பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்துதல்

4) பயனீட்டாளர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு தற்போது உள்ள சட்ட விதிகளுடன் இணைந்து பணியாற்றுதல்

5) மக்கள்(பயனீட்டாளர் )தங்கள் உரிமைகளை நிலைநாட்டுதலில் தங்கள் பங்களிப்பு கொடுப்பதற்கு சமூகத்தை ஊக்குவித்தல்

6) தரமான பொருள் உற்பத்தியை உறுதிபடுத்துதல்

7) சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களையும் அதன் காரணிகளையும் ஆய்வு செய்து அது சம்பந்தமான அமைச்சுகள், நிறுவனங்களுக்கு பரிந்துரைகளும் ஆலோசனைகளும் வழங்குதல்

8) புத்ககம் –இதழ்கள்-கையேடு பதிப்பு, உச்ச வரம்பு விலை பட்டியல் வெளியிடுதல் , பயனீட்டாளர் கழகங்கள், சந்தை நிறுவனங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்