கெடா, தெலுக் நிபாவில் மண் அரிப்பு. 100 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உடனடி நடவடிக்கை தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம்அறைகூவல்.

தெலுக் நிபா கடலோரத்தின் நீர்கள் அருகிலுள்ள மலையிலிருந்து ஏற்பட்ட மண் அரிப்பு சேற்றால் மாசடைந்துள்ளன.

பத்திரிகைச் செய்தி  15.07.2025

கெடா,கோலா மூடா மாவட்டத்தின் கம்போங் தெலுக் நிபாவில் மண் அரிப்பு பிரச்சினையை தீர்க்க, கெடா மாநில அரசு, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை  மற்றும் உள்ளூர் மாவட்ட  தரப்பினரை, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கிராமத்தில் மலைகளை அகற்றுதல் மற்றும் நில மீட்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட சம்பவம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்த பிரச்சினையை தீர்க்க எந்த தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பி.ப.சங்கத்தின் தலைவர்
முகைதீன் அப்துல் காதர் வருத்தம் தெரிவித்தார்.

பி.ப.சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அருகிலுள்ள மலையிலிருந்து மண் அரிப்பு காரணமாக தெலுக் நிபாவின் நீரில் உள்ள கடல் நீர் சிவப்பு நிறமாகவும் சேறும் சகதியுமாக இருப்பதை தாங்கள் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

கம்புங்க் தெலுக் நிபாவில் மண் அரிந்த பகுதிகளில் ஒன்று.

இந்த நிலைமை கிராமத்தில் உள்ள சுமார் 100 கடலோர மீனவர்களின் செயல்பாடுகள் மற்றும் வருமான ஆதாரங்களையும் பாதித்துள்ளது. பெரிய அலைகள் மீட்டெடுக்கப்பட்ட பகுதியைத் தாக்கும் போது மற்றும் கனமழையால் அழிக்கப்பட்ட மலையிலிருந்து மண்ணை அரிக்கும் போது இந்த நிலைமை மோசமடைகிறது என்றார் அவர்.

குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மலைச் சரிவு சரிந்து, கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என குடியிருப்பாளர்கள் நன்புகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கான மூல காரணத்தை கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு இன்னும் கடுமையாக பாதிக்கப்படும் என்று பி.ப.சங்கம்  நம்புகிறது.

கடல் நீர் மாசுபாடு மற்றும் சேற்று வண்டல் படிவுகள் ஆகியவற்றால்  நண்டுகள், நத்தைகள், மீன்கள் மற்றும் இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.

மீனவர்களின் படகுத் துறையைச் சுற்றியுள்ள பகுதியும் ஆழமற்றதாக மாறக்கூடும், இதனால் அவர்கள் தங்கள் மீன்பிடிப் பொருட்களை தரையிறக்குவது, படகுகளை நங்கூரமிடுவது மற்றும் கடலுக்குள் செல்லும்போது நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம் என்றார் முகைதீன்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணையை நடத்தி, இந்தப் பிரச்சினை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும், கிராமத்தில் உள்ள கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதையும் தடுக்க பயனுள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று பி.ப.சங்கம் நம்புகிறது.

சேற்று வண்டல்கள் கடலுக்குள் பாய்வதையும், கடலோர மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் மீன்பிடி தளங்களை மாசுபடுத்துவதையும் தடுக்க பாதிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக அரிப்பைத் தணிக்கவும், தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  வலியுறுத்த விரும்புவதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்