
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) சந்தைகளில் விற்கப்படும் கறிவேப்பிலை விலையேற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு கிலோ RM18-க்கு விற்பனை செய்யப்படுவது பயனீட்டாளர்களை ஏமாற்றும் “பகற்கொள்ளை” என்று அது வர்ணித்துள்ளது.
தற்போது சந்தைகளில் (Wet Markets) கறிவேப்பிலை ஒரு கிலோ RM14 முதல் RM18 வரை விற்கப்படுகிறது. ஆனால், உள்ளூரில் பயிரிடப்படும் பட்சத்தில் இதன் விலை ஒரு கிலோ வெறும் RM1-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வில், சுமார் 100 கிராம் எடை கொண்ட ஒரு சிறு கட்டு கறிவேப்பிலை RM3 முதல் RM4 வரை விற்கப்படுவது தெரியவந்தது. இது ஒரு கிலோ கணக்கில் கணக்கிடப்படும்போது மிக அதிக விலையாகும்.
குறிப்பாக பினாங்கு, லிட்டில் இந்தியா போன்ற தேவை அதிகம் உள்ள இடங்களில் வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதாகக் கருதப்படுகிறது.
விலைவாசி உயர்விலிருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீடுகளிலும், குறிப்பாக இல்லத்தரசிகள் சொந்தமாக கறிவேப்பிலை செடியை வளர்க்க வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.
THE SUN NEWS PAPER
