பத்திரிகை செய்தி 6.11.2
வனம் மற்றும் நிதி கூட்டணி பற்றி உலகத் தலைவர்கள் விரைவில் கோப் 30 க்காக பிரேசிலில் கூடவுள்ளனர்.
இதில் பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு வெப்பமண்டல காடழிப்பை ஊக்குவிக்கும் துறைகளுக்கான நிதி அதிகரித்துள்ளது என்று வனங்கள் மற்றும் நிதி கூட்டணியின் புதிய அறிக்கைப்பற்றி கலந்தாலோசிக்கப்படும் என்று வனம் மற்றும் நிதி கூட்டணியின் சார்பாக பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் மீனாட்சி இராமன் தெரிவித்தார்.
கடந்த 18 மாதங்களில் உலகளாவிய வங்கிகள் வன-ஆபத்து துறைகளுக்காக 72 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழ்ங்கியுள்ளன. அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் 42 பில்லியன் அமெரிக்க டாலர்களை பத்திரங்கள் மற்றும் பங்குகளில் வைத்திருக்கிறார்கள்.
பல்லுயிர் சரிவுக்காக வங்கிகள் பணத்தை தாராள்மாக வழங்கி வருகின்றன. ஆகவே நிதியை ஒழுங்குபடுத்துவதற்கான நேரம் இது என்று மீனாட்சி தெரிவித்தார்.
வங்கிகள் செம்பெண்ணெய் , சோயா, மாட்டிறைச்சி, கூழ் மற்றும் காகிதம் போன்ற வன-ஆபத்து பொருட்களுக்கு முதலீட்டு செய்ய வழங்குகிறது.
உலகின் முன்னணி 30 வங்கிகளில் பாதி, 2016 முதல் காடழிப்பு தொடர்பான துறைகளுக்காக தங்களின் நிதியை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
2016 முதல், வங்கிகள் வன-ஆபத்து பொருட்கள் நிறுவனங்களுக்கு 429 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்கியுள்ளன, இது 35 சதவீதம் அதிகரிப்பாகும். பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர், ஊழியர் சேமனிதி வாரியம் (EPF) 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் வான்கார்ட் 3.4 பில்லியன் டாலர்.
ஐந்து நிதி மையங்கள் இந்த நிதியுதவியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை அமெரிக்கா, மலேசியா, பிரேசில், ஜப்பான் மற்றும் பிரிட்டன் என்றார் மீனாட்சி.
சில வங்கிகள் தங்கள் வன-ஆபத்து கடன்களை அதிவேகமாக அதிகரித்துள்ளன. வன-ஆபத்து துறைகளில் மலேசியாவின் கணிசமான நிதியுதவி மற்றும் முதலீடு அதன் பரந்த பொருளாதார மேம்பாட்டு மாதிரியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் வன வளங்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க வலுவான, பொறுப்பான முதலீடு மற்றும் நிதி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்படுத்த மலேசிய நிதி நிறுவனங்களின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
சுய-ஒழுங்கு முறை அல்லது தன்னார்வ அணுகுமுறைகளின் கவலைகள் மற்றும் சிக்கல்கள் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய அறிக்கையின் ஒரு முக்கிய செய்தி, காடழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்ய நிதியை ஒழுங்குபடுத்துவதற்கு சிவில் சமூக இயக்கங்கள் அழைப்பு விடுக்கும் வேகம் அதிகரித்து வருகிறது.
பல்லுயிர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை நிதி ஒழுங்குமுறைக்கு மையமாக மாற்றுவதன் மூலம் “பொறுப்புக்கூறல் இடைவெளியை” மூட அரசாங்கங்களை இந்த கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
“பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை நாம் நிறைவேற்ற விரும்பினால், அரசாங்கங்கள் காகித வாக்குறுதிகளிலிருந்து செயல்படுத்தக்கூடிய விதிகளுக்கு மாற வேண்டும் என மீனாட்சி கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டணி வன ஆபத்துள்ள துறைகளுக்கு வழங்கப்படும் நிதியை ஆராய்ந்து, பல்லுயிர் மற்றும் பூர்வீக உரிமைகளை பாதுகாக்க வலுவான செயல்படுத்தக்கூடிய நிதி விதிமுறைகளைப்பற்றி கண்காணிக்கின்றது.
மீனாட்சி ராமன்
வனம் மற்றும் நிதி கூட்டணியின் சார்பாக மற்றும்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.
