பத்திரிகைச் செய்தி. 29.07.2025
நாடு தழுவிய அளவில் வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதித்த சுகாதார அமைச்சரை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று பாராட்டியது
எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற மலேசிய அரசாங்கம் அதை முழுமையாகத் தடை செய்ய வேண்டிய நேரம் இது என்று அச்சங்கத்தின் கல்வி மற்றும் புகைப்பதற்கு எதிரான அதிகாரி என்.வி சுப்பாராவ் தெரிவித்தார்.
மிகச் சரியான காலக்கட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் போதைக்கு அடிமையாக்கும் ஒரு பொருள்.
அவற்றில் நச்சுப் பொருட்கள் உள்ளன. சட்டவிரோதப் பொருட்களுடன் கலந்த வேப் சம்பவங்கள், மலேசியாவில் அதிகரித்து வருகின்றன.
வேப் வர்த்தகர்களின் வார்த்தைகளையும், எதிர்காலத்தில் நாம் உருவாக்கும் மிகப்பெரிய சுகாதார மற்றும் சமூகச் சுமையையும் கேட்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சுக்கு பி.ப.சங்கம் நினைவூட்டுகிறது. நமக்கு வேண்டியது முழுமையான தடை.
முன்பு வேப் தொழில்துறைக்கு அடிபணிந்ததால் பிரச்சினை மோசமடைந்தது.
இப்போது அது போதைப்பொருள் பிரச்சனையாக மாறியுள்ளது என்றார் சுப்பாராவ். அரசாங்கம் தொழில்துறையைக் கேட்பதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களைக் கேட்க வேண்டும்.
முழு தடையிலிருந்து பின் வாங்க வேண்டாம் என சுகாதார அமைச்சை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
செயல்பட வேண்டிய நேரம் நாளையல்ல. இன்று என தெரிவித்த சுப்பாராவ், எதிகால சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய தருனத்தில் நாம் இருக்கின்றோம் என்றார்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

