வண்ணச்சாயங்களில் காரீயம் இன்னும் அதிகமாக உள்ளது. நீக்குவதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி. 23.10.2025

உலக சுகாதார நிறுவனம்  அக்டோபர் 19 லிருந்து 25 வரை சர்வதேச ஈய நச்சு தடுப்பு வாரமாக  அங்கீகரித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது காரீய வெளிப்பாட்டின் உடல்நல பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள், “பாதுகாப்பான நிலை இல்லை: காரிய வெளிப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர இப்போதே செயல்படுங்கள்” என்பதாகும்.

காரிய வெளிப்பாட்டின் ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை இது  நினைவூட்டுகிப்றது என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.

காரீய நச்சுத்தன்மையைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில், நன்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் பரவலான ஈய வெளிப்பாட்டின் ஆதாரமான அனைத்து வண்ணச்சாயங்களி இருக்கும் காரீயத்தை தடைசெய்யும் வலுவான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துவதும், ஈய வண்ணச்சாயங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான நிறமிகளான ஈய குரோமேட்டுகளின் உலகளாவிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  மற்றும் மலேசிய வண்ணச்சாயம் மற்றும் பூச்சு உற்பத்தியாளர்கள் சங்கம்  ஆகியவை மலேசிய அரசாங்கத்தை வண்ணச்சாயங்களில் காரீயத்தை அகற்றுவதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றன.

2017 முதல் வண்ணச்சாய உறுப்பினர்கள் 2018 ஆம் ஆண்டுக்குள் அலங்கார வண்ணச்சாயங்களிலும், 2020 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வண்ணச்சாயங்களிலும் காரியத்தை அகற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.

உகக சுகாதார நிறுவனம் காரியம் அடங்கியுள்ள வண்ணச்சாயத்தை குழந்தைகளின் சாத்தியமான ஈய நச்சுத்தன்மைக்கு “ஒரு முக்கிய காரணம் என்று அழைக்கிறது. எனவே, இளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக காரிய வண்ணச்சாயங்களின் காரீய  வெளிப்பாடு முக்கியமாநதாக இருக்கின்றது.

இதற்கு அவசர நடவடிக்கைகள் தேவைகள் என்றார் முகைதீன். குழந்தைகளுக்கான பொம்மைகளில் காரீய வண்ணச்சாயங்களுக்கான மலேசியாவின் தரநிலை ஒரு மில்லியனுக்கு 90 பாகங்களுக்கு மேல் (ppm) கட்டுப்படுத்துகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட வண்ணச்சாயங்களில் உட்பட மலேசிய சந்தையில் எனாமல் சாயத்தை காண்கிறோம். 2022 ஆம் ஆண்டில் அலங்கார எனாமல் வண்ணச்சாயங்களில் பி.ப சங்கம் நடத்திய சோதனையில், பரிசோதிக்கப்பட்ட 28 மாதிரிகளில் 20ல் காரியம் இருப்பதைக் கண்டறிந்தோம்.

அவற்றில் இரண்டில் 10,000 ppm க்கும் அதிகமான காரீயம் இருப்பது கண்டறியப்பட்டது.  2023 ம் ஆண்டில் 31 வண்ணச்சாயங்களை  பகுப்பாய்வு செய்ததில் 31 மாதிரிகளில் 15 ல் காரீயம் இருப்பது கண்டறியப்பட்டது.

பெயிண்ட் உற்பத்தியாளர் வேண்டுமென்றே ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக பெயிண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரீய கலவைகளைச் சேர்க்கும்போது பெயிண்ட்களில் அதிக அளவு ஈயம் உள்ளது.

காரீயம் என்பது பல உடல் அமைப்புகளைப் பாதிக்கும் ஒரு குவியும் நச்சுப் பொருள். இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காரீயம் குறிப்பாக ஆபத்தானது என்றாலும், இது வெளிப்படும் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும்.

இளம் குழந்தைகள் குறிப்பாக ஈய நச்சுக்கு ஆளாகிறார்கள். மேலும், குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வம் மற்றும் அவர்களின் வயதுக்கு ஏற்ற கை-வாய் நடத்தை, மாசுபட்ட மண் அல்லது தூசி போன்ற காரீயம் கொண்ட அல்லது காரீயம் பூசப்பட்ட பொருட்களை வாயில் கவ்வி விழுங்கிவிடலாம்.

காரீயம் உடலில் நுழைந்தவுடன், அது மூளை, சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் எலும்புகள் போன்ற உறுப்புகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.  உடல் பற்கள் மற்றும் எலும்புகளில் காரீயத்தை சேமித்து வைக்கிறது. அங்கு அது காலப்போக்கில் குவிகிறது. எலும்பில் சேமிக்கப்படும் காரீயம் கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் வெளியிடப்படலாம், இதனால் கருவுக்கு ஆபத்து ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் காரீயத்திற்கு ஆளாகிறார்கள். காரீய வெளிப்பாட்டின் விளைவுகளில் கற்றல் குறைபாடுகள், சமூக விரோத நடத்தைக்கான அதிகரித்த ஆபத்து, கருவுறுதல் குறைதல் மற்றும் பிற்காலத்தில் சிறுநீரக மற்றும் இருதய நோய்க்கான அதிகரித்த அபாயங்கள் ஆகியவை அடங்கும் என்றார் முகைதீன் அப்துல் காதர்.

ஈயத்தின் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டும், உலகளவில் காரீய வண்ணச்சாயங்கள் ஒழிப்பு வேகம் பெற்று வருவதைக் கருத்தில் கொண்டும், பி.ப சங்கம் மற்றும் வண்ணச்சாய சங்கம் ஆகியவை மலேசிய அரசாங்கத்தை புதிய சட்டத்தை அறிவித்து அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றன.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

தியோ ஈ பெங்
உதவித் தலைவர்
மலேசிய வண்ணச்சாய உற்பத்தியாளர் சங்கம்