நீங்கள் உங்களுக்கான பயனீட்டாளர் உரிமைகளை உணர்ந்திருக்கிறீர்களா?

நிலைபேறான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் நமக்குத் தேவை

நீங்கள் உங்களுக்கான பயனீட்டாளர் உரிமைகளை உணர்ந்திருக்கிறீர்களா?

இந்த உலக பயனீட்டாளர் உரிமை தினத்தில், ஒரு பயனீட்டாளராக உங்கள் உரிமைகள் மற்றும் நிலைபேறான வாழ்க்கை முறைக்கான நியாயமான மாற்றத்திக்கான வழிமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்.

பயனீட்டாளர்களாக, நமக்கு 8 அடிப்படை உரிமைகள் உண்டு:

➢ அடிப்படைத் தேவைக்கான உரிமை – அன்றாட பிழைப்புக்கு தேவையான அடிப்படைப் பொருள்கள் மற்றும் சேவைகள்.  இவற்றில் போதிய உணவு, துணிமணிகள், உறைவிடம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவையும் அடங்கும்.

➢பாதுகாப்புக்கான உரிமை – ஆரோக்கியத்திற்கு அல்லது உயிருக்குப் பாதிப்புகளை உருவாக்கும் உற்பத்திகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

➢தேர்ந்தெடுக்கும் உரிமை – பலதரப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளிலிருந்து தரமானவற்றை நியாயமான விலையில் தேர்ந்தெடுக்கும் உரிமை.

➢    குரல் கொடுப்பதில் உள்ள உரிமை – பயனீட்டாளர்களின் நலனைப் பாதிக்கும் அளவுக்கான அரசாங்கக் கொள்கை தொடர்பான கேம்பாட்டுத் திட்டங்கள், செயலாக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை.

➢ தெரிந்துகொள்வதில் உள்ள உரிமை – தவறான விளம்பரங்கள் மற்றும் வணிகச் சின்னங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு,  பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உண்மையான சரியான தகவல்களைத் தெரிந்துகொள்வதில் உள்ள உரிமை.

➢    ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை – நல்வாழ்வு மற்றும் சுயமதிப்பினைப் ஆதரிக்கும் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் நிலைபேறான சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு மற்றும் பணியாற்றுவதற்கான உரிமை.

➢    இழப்பீடு பெறுவதில் உள்ள உரிமை – குறைபாடுகளுடைய, கெட்டுப்போன பொருள்கள், மோசமான சேவைகள் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகளின் விளைவாக இழப்பீட்டினைப் பெறுவதில் உள்ள உரிமை.

➢    பயனீட்டாளர் கல்வி பெறுவதில் உள்ள உரிமை – தகவலறிந்த மற்றும் பொறுப்பான பயனீட்டுத் தேர்வுகளைச் செய்வதற்கான தகவல் மற்றும் திறன்களைப் பெறுவதில் உள்ள உரிமை.

நிலைபேறான வாழ்க்கை முறைக்கான நியாயமான மாற்றம் என்பது எல்லாப் பயனீட்டாளர்களும் சூழல் சிநேகமான தேர்வுகளை எந்த வித நியாயமற்ற சுமைகள் இல்லாமல் செய்வதாகும். நியாயமான, பாதுகாப்பான மற்றும் நிலைபேறான பயனீட்டினை ஆதரிக்கும் கொள்கைகளை வலியுறுத்துவோம்.

மேலும் படிக்க:
https://bit.ly/3VHoBfG

#ConsumerRights #WCRD2025 #SustainableLifestyles #JustTransition