பத்திரிகைச் செய்தி : 04.09.2025
கிடைத்த பணத்தை அனாவசிய பொருட்களுக்கு செலவு செய்ய வேண்டாம்.
பயனீட்டாளர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நினைவுறுத்து.
மை காசே நடைமுறையின் கீழ் 100 ரிங்கிட் சாரா உதவித் தொகையை வழங்கியிருக்கும் மடானி அரசாங்கத்தை பாராட்டியுள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம், அந்த உதவித் தொகையைப் பெற்றவர்கள் அப்பணத்தை அரோக்கியமான தேவைகளுக்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
100 ரிங்கிட் தானே என அலட்சியப் படுத்தாமல், ஒரு குடும்பத்தில் 5 பேருக்கு அடையாளகார்டு இருந்தாலே 500 ரிங்கிட் கிடைத்து விடும். ஆகவே அப்பணத்தை வைத்துக்கொண்டு, அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காண முக்கிய பொருட்களை வாங்க முடியும் என்றார் அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ். அரசாங்கம் வழங்கியுள்ள இப்பணம் தக்க தருனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசுத் தொகையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக ஒரு குடும்பத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் தீபாவளி செலவுகளை இப்பணத்திலேயே முடித்துக் கொள்ளலாம் என்றார் சுப்பாராவ்.
இப்பணத்தை எடுப்பதற்கு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு இருப்பதால் நாம் அவசரப்பட்டு சாரா பணத்தை எடுக்க வேண்டாம் என அவர் நினைவு படுத்தினார். கால அவகாசம் இருபதால் முன்கூட்டியே பணத்தை செலவு செய்ய வேண்டாம். இந்த சாரா உதவித்தொகை நமது அன்றாட வாழ்க்கை செலவுகளுக்கு கைகொடுக்கும் ஒரு தொகையாகும்.
ஆனால் பலர் அப்பணத்தைப்மீட்டு அலங்கார பொருட்கள், அதிக விலை கொண்ட ஆடைகள், காலணிகள், புதிய பொருட்களை வாங்க எண்ணம் கொண்டுள்ளது தவறான முடிவாகும் என்றார் அவர்.
வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் தாளிப்பு பொருட்களை வாங்க இந்த சாரா உதவித் தொகையை பயன்படுத்த வேண்டும்.
அனாவசிய பொருட்களை மறந்துவிட வேண்டும்.
மாமிச உணவுகளுக்கு சாரா உதவித் தொகையை பயன்படுத்தாமல், வீட்டுக்கு தேவையான தினசரி பொருட்களுக்கு சாரா பணத்தை செலவு செய்யுங்கள்.
மேலும் தீபாவளி சமயத்தில் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்படுவதால் எந்தெந்த பொருட்களின் விலைகள் உயர்வு காணும் என்பது தெரியாது. அக்டோபர் 10ம் தேதி அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
அதன் பிறகு கண்டிப்பாக சில பொருட்களின் விலைகள் உயர்வுகாண வாய்ப்பு உண்டு.
ஆகவே நாம் மிக புத்திசாலித்தனமாக சாரா உதவி பணத்தை சிக்கனமாக, விரையம் செய்யாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
என்.வி சுப்பாராவ்
கல்வி/ ஆய்வுப்பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

