பினாங்கு பயனீட்டாளர் சங்க புகையிலைக்கு எதிரான இயக்க வழிநடத்துனர் என்.வி. சுப்பாராவுக்கு புகையிலை கட்டுப்பாட்டு முன்மாதிரி விருது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் (பிபச) புகையிலைக்கு எதிரான தீவிர விழிப்பணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், அச்சங்கத்தின் மூத்த அதிகாரி என்.வி.சுப்பாரவ் அவர்களுக்கு, புகையிலை கட்டுப்பாட்டு முன்மாதிரி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.
சைபர் ஜாயாவில் நிகழ்ந்த, 2025 தேசிய ரீதியிலான புகையிலை அற்ற தின கொண்டாடத்தின் போது, இந்த விருது சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிப்ளி அஹமட் அவர்களால் வழங்கப்பட்டது.
“நான் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 25,000க்கும் அதிகமான தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்தப் போராட்டதை முன்னெடுத்து சென்றிருக்கிறேன்”. என்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சில மாணவர்கள், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நான் புகையிலை பிடிப்பதை நிறுத்தியிருக்கிறேன் என்று என்னிடம் வந்து கூறும் போது, அதுவே எனது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

தனக்கு கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, மலேசிய இளைஞர்களிடையே, ஆரோக்கியமான புகையிலை அற்ற வாழ்க்கை முறையை தொடர்ந்து ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கும் இது மேலும் வலு சேர்த்திருக்கிறது என்று அவர் கூறினார்.

மூலம்: பெர்னாமா (31 மே 2025)