பத்திரிகைச் செய்தி: 21.02.2025
இது மிகவும் வருந்தத்தக்கது. சாப்பிடுவதற்குப் பொருந்தாத அனைத்து குப்பை உணவுகளையும் தடை செய்ய வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.
பள்ளிக்கு வெளியே விற்கப்பட்ட கேண்டி மிட்டாயை வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் மூச்சுத் திணறி ஆபத்தான நிலையில் இருந்தவர் இறந்துவிட்டார்.

இது தற்செயல் நிகழ்வு அல்ல. முதலாவதாக, மிட்டாய் சந்தையில் விற்கப்பட்டிருக்க்ழ் கூடாது என்கிற பினாங்கு பயனீட்டாளர் சங்கம். 10 வயதான ஃபஹ்மி ஹபீஸ் ஃபக்ருதீன், செவ்வாய்க்கிழமை தனது பள்ளிக்கு வெளியே இந்த கெண்டி மிட்டாயை வாங்கி சாப்பிட்டார்.
மிட்டாய் மெல்லும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிட்டாய் தொண்டையில் அடைத்துக்கொண்டதால் அவருக்கு சுவாசக் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஃபாமியின் தொண்டையில் மிட்டாய் சிக்கியதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவரது முகம் நீல நிறமாக மாறியது என அவரது பெற்றோர் தெரிவித்தனர். நீண்டநேர ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஃபாமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அச்ய்வுபடி சந்தையில் நூற்றுக்கணக்கான சத்தில்லாத இரசாயனங்கள் சேர்க்கபொ மிட்டாய்கள் மற்றும் குப்பை உணவுகள் குழந்தைகளுக்கு விற்கத் தயாராக உள்ளன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுபிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
அளவுக்கு அதிகமான சீனி மற்றும் வர்ணங்களை கொண்ட இந்த இனிப்பு மிட்டாய்கள் பெரும்பாலானவை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றார் சுப்பாராவ். இந்த மிட்டாய்கள் மிகவும் கவர்ச்சிகரமானவானவில் நிறங்கள் கொண்டவை. நாம் இளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகிறோம்.
இந்தக் குழந்தைகளுக்கு இம்மாதிரியான குப்பை உணவுகளில், என்ன சேர்க்கப்பட்டுள்ளது, அதன் தரம், உள்ளடக்கம், காலாவதி தேதி மற்றும் மற்றது எதுவும் தெரியாது. நிறம், சர்க்கரை அல்லது இனிப்பு மட்டுமே அவர்களின் ஈர்ப்பு.
இது மிகவும் விலை உயர்ந்ததல்ல. அவை பள்ளிகளுக்கு வெளியே விற்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு வெளியே பல மினி சந்தைகள் உள்ளன. ஆனால் உள்ளூர் அதிகாரிகள் இந்த வியாபாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இது எங்கள் பிரச்சினை அல்ல என அதிகாரிகள் தங்கள் கைகளைக் கழுவ முடியாது. குழந்தைகளுக்கு விற்கப்படும் குப்பை உணவுகள் குறித்து கடுமையான சட்டம் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு விற்கப்படும் அனைத்து இனிப்புகள் மற்றும் உணவுகளும் சுகாதார அமைச்சின் ஒப்புதல் சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும். சுகாதார அமைச்சு இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.
உள்ளூர் அதிகாரிகள் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். பள்ளி வளாகங்களுக்கு வெளியே குப்பை உணவுகளை விற்கும் வியாபாரிகள் மீது அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து கொடுத்தால் மாண்வர்களும் குப்பை உணவுகள் மீது நாட்டம் செலுத்த மாட்டர்கள் என்றார் சுப்பாராவ்.
குழந்தைகளுக்கு விற்கப்படும் குப்பை உணவுகள் குறித்து கடுமையான சட்டம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விற்கப்படும் அனைத்து இனிப்புகள் மற்றும் உணவுகளும் சுகாதார அமைச்சின் ஒப்புதல் சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து குழந்தைகள் உணவுகளின் மீது சரிபார்க்க சுகாதார அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புவதாக சுப்பாராவ் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு ஆய்வின்படி சந்தையில் குழந்தைகளுக்காக 200 க்கும் மேற்பட்ட குப்பை உணவுகள் விற்பனையில் உள்ளன. அவை அனைத்திலும் குழந்தைகளுக்குப் பொருந்தாத பல்வேறு வகையான வண்ணங்களுடன் சர்க்கரையும் உள்ளது. இது வேப் சுவைகளைப் போன்றது. பழ சுவைகள்.
பள்ளி கேண்டீனில் அல்லது பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களுக்கு பல வகையான இனிப்பு மிட்டாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்காததால், உள்ளூர் கடைகள் மற்றும் மினி ஸ்டால்களில் மலைபோல் குழந்தைகளின் குப்பை உணவுகள் குவிந்துள்ளன. இவற்றை தடை செய்ய வேண்டும் என்றார் சுப்பாராவ்.
என். வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

