குளோரேட் என்ற வேதிப்பொருளின் “அதிக அளவுகள்” இருப்பதால், ஐரோப்பா முழுவதும் சில நாடுகளில் கொக்கா கோலா (coca – cola) அதன் பானங்களை திரும்பப் பெற்றுள்ளது. பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் இந்த திரும்பப்பெறுதல் கவனம் செலுத்தியதாக கொக்கோ கோலா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகவே மலேசியாவில் விற்கபடும் கோகோ கோலா தயாரிப்புகளில் குளோரேட் மீது சுகாதார அமைச்சு சோதனை நடத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலேசியாவில் கோகோ கோலா தயாரிப்புகளில் குளோரேட் கலப்படம் உள்ளதா என்று சோதிக்கப்பட வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
முடிவுகள் கிடைக்கும் வரை, இந்த தயாரிப்புகளின் விற்பனையை சுகாதார அமைச்சு நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது கொக்கோ கோலா மலேசியா, 80 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தயாரித்து, சந்தைப்படுத்துகிறது மற்றும் விநியோகிக்கிறது.உயர்ந்த குளோரேட் அளவு காரணமாக ஐரோப்பா முழுவதும் கோகோ கோலா திரும்ப பெறப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் குளோரின் சுத்திகரிப்பாளர்களின் துணை தயாரிப்பான குளோரேட், அயோடின் குறைபாடு என்பது தைராய்டு செயலிழப்பு மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைப்பதோடு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குளோரின் அடிப்படையிலான கிருமிநாசினிகள் நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்போது குளோரேட்டை உற்பத்தி செய்யலாம். குளோரேட் மாசுபாட்டிற்கு அப்பால், சர்க்கரை கலந்த பானங்கள் உடல் பருமன், வகை 2 நீரிழிவு, மற்றும் பல் சிதைவு ஆகியவற்றிற்கு பங்களிக்கும்.
மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் அதிக உடல் பருமன் விகிதங்களில் உள்ள ஒரு நாடாகும். உடல் பருமன் இருதய நோய், நீரிழிவு, தசைக்கூட்டு கோளாறுகள் மற்றும் புற்றுநோய் உட்பட 200 க்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஆண்களில் ஏழு மடங்கும், பெண்களில் பன்னிரெண்டு மடங்கும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட கோகோ கோலா தயாரிப்புகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பத்திரிக்கைச் செய்தி : 8 February 2025