பினாங்கில் வாகன நிறுத்தும் பிரச்சினை கட்டுக்கடங்காமல் உள்ளது. விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் தங்கள் கார்களை நிறுத்தும் வாகனமோட்டிகள்! கார் நிறுத்தும் இடத்தில் வாளி, டையர், பூந்தொட்டி, குப்பைத்தொட்டிகளை வைக்கும் பொது மக்கள்.

Parking where there is no parking lot, Market Street
Double line parking at Ah Quee Street
Parking in the clamping zone

 

 

 

 

 

 

Parking at double yellow line, Jalan Residensi
Parking at double line, Jalan Utama
Parking outside the parking lot, Penang Street

 

 

 

 

 

Parking at service road, Penang Street

 

 

Illegal parking at Market Street and Queen Street junction
Illegal parking at King Street and Market Street junction

 

 

 

 

 

 

Unlawful reservation of parking spot, King Street
Unlawful reservation of parking spot, Chulia Street
Unlawful reservation of parking spot China Street

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பத்திரிகைச் செய்தி :  30.04.2026

எரிச்சல் தரும் செய்கைகள்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

பினாங்கில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் , ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவது உட்பட, வாகன நிறுத்தம் தொடர்பான விதிமுறைகளைத் தொடர்ந்து மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கு மாநில நகராட்சி மன்றம் மற்றும் போக்குவரத்து காவல்துறையை வன்மையாக வலியுறுத்த விரும்புகிறது.

அண்மையில் பினாங்கு தீவு முழுவதும் பி.ப.
சங்கம் நடத்திய ஒரு ஆய்வில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்தும் போக்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தியிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

பல வாகனமோட்டிகள் மற்ற சாலைப் பயனாளிகள் மீது தங்கள் செயல்களால் ஏற்படும் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல், தேவையற்ற ஆபத்துகளையும் சிரமங்களையும் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

குறிப்பாக பினாங்கு பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஜாலான் ரெசிடென்சி சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, வாகனங்கள் அடிக்கடி இரட்டை மஞ்சள் கோடுகளுக்கு அருகில் நிறுத்தப்படுவதால், இந்த நிலைமை ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது என்றார் முகைதீன்.

குறிப்பாக மார்க்கெட் தெரு பகுதியில், பொது வாகன நிறுத்துமிடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தெரியவந்துள்ளது

அங்கு சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடங்களை முன்பதிவு செய்ய பீப்பாய்கள், நெகிழி நாற்காலிகள், பூந்தொட்டிகள் மற்றும் பிற பொருட்களை வைத்து நிறுத்தம் இடத்தில் வேறு வாகனங்கள் நிறுத்தி வைக்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

மேலும், நடைபாதைகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்துவதோடு, பாதசாரிகளின் நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கின்றன என்றார் முகைதீன்.

ஆகவே சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான, தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில நகராண்மை கழகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையை பி.ப.சங்கம் வலியுறுத்துகிறது.

பினாங்கில் ஒழுங்கை மீட்டெடுக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், அனைத்து சாலைப் பயனாளிகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் பேணவும் உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றார் முகைதீன் அப்துல் காதர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Press Statement, 29 April 2026